Skip to main content

Posts

Showing posts with the label Family

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


வேலையின்மையால் ஆண்களுக்குள் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை

29 வயது பெண் நான். கடந்த ஒரு மாதமாக என் கணவரை பற்றி ஒரு பெரிய சந்தேகம் வந்துகொண்டே இருந்தது. ஏனெனில் அவர் அலுவலகத்தில் தான் அதிக நேரம் செலவழிக்க ஆரம்பித்தார். என்னோடோ, எங்கள் மகளோடோ பேசவே இல்லை. ஜூன் மாதத்திலிருந்து எங்களுக்குள் எதுவும் இல்லை. பலமுறை வெளியே போக பிளான் பண்ணி, சின்ன Outing போவோமா என்று கேட்டேன். அவர் எப்போதும் தவிர்த்து விட்டார். சனிக்கிழமை கூட அலுவலகம் போக ஆரம்பித்தார். நேற்றோடு என்னால் தாங்க முடியாமல், மிகுந்த கோபத்தில் நான் நேரடியாக அவருடைய ஆபீஸுக்கே போய் விட்டேன். அங்கு என்னை உள்ளே விடவே இல்லை, ID கார்டு இல்லாமல். ஆனால் அவர்கள் ஒரு “Admin” நம்பர் கொடுத்து, அவசர நிலை வந்தால் குடும்பத்தினர் தொடர்பு கொள்ளலாம் என்றனர். அதை தொடர்பு கொண்டபோது, எனக்கு அதிர்ச்சி தரும் ஒரு உண்மை தெரிய வந்தது. என் கணவர் மே 2025 இல் இருந்தே அந்த நிறுவனத்தில் வேலை செய்யவில்லை! அந்த நேரமே என்னுள் சந்தேகம் மிகுந்தது. இதை என் பெற்றோரிடம் சொல்லாமல், அவர் அப்பா அம்மாவை அழைத்து எங்கள் வீட்டுக்கு வரச் சொன்னேன். இரவு 9 மணிக்கு, அவர் Formal Dress ல, ID கார்டுடன் வந்தார். உடனே அவரது அப்பா, “எங்கப்பா ப...