29 வயது பெண் நான். கடந்த ஒரு மாதமாக என் கணவரை பற்றி ஒரு பெரிய சந்தேகம் வந்துகொண்டே இருந்தது. ஏனெனில் அவர் அலுவலகத்தில் தான் அதிக நேரம் செலவழிக்க ஆரம்பித்தார். என்னோடோ, எங்கள் மகளோடோ பேசவே இல்லை. ஜூன் மாதத்திலிருந்து எங்களுக்குள் எதுவும் இல்லை.
பலமுறை வெளியே போக பிளான் பண்ணி, சின்ன Outing போவோமா என்று கேட்டேன். அவர் எப்போதும் தவிர்த்து விட்டார். சனிக்கிழமை கூட அலுவலகம் போக ஆரம்பித்தார். நேற்றோடு என்னால் தாங்க முடியாமல், மிகுந்த கோபத்தில் நான் நேரடியாக அவருடைய ஆபீஸுக்கே போய் விட்டேன்.
அங்கு என்னை உள்ளே விடவே இல்லை, ID கார்டு இல்லாமல். ஆனால் அவர்கள் ஒரு “Admin” நம்பர் கொடுத்து, அவசர நிலை வந்தால் குடும்பத்தினர் தொடர்பு கொள்ளலாம் என்றனர். அதை தொடர்பு கொண்டபோது, எனக்கு அதிர்ச்சி தரும் ஒரு உண்மை தெரிய வந்தது.
என் கணவர் மே 2025 இல் இருந்தே அந்த நிறுவனத்தில் வேலை செய்யவில்லை!
அந்த நேரமே என்னுள் சந்தேகம் மிகுந்தது. இதை என் பெற்றோரிடம் சொல்லாமல், அவர் அப்பா அம்மாவை அழைத்து எங்கள் வீட்டுக்கு வரச் சொன்னேன்.
இரவு 9 மணிக்கு, அவர் Formal Dress ல, ID கார்டுடன் வந்தார். உடனே அவரது அப்பா,
“எங்கப்பா போயிட்டு வந்த?” என்று கேட்டார்.
அவர் வழக்கம் போல,
“ஆபீஸுக்கு தான். Project romba hectic aa pogudhu… அதனால் தான் Late ஆகுது” என்றார்.
அப்போது அவர் அப்பா கடுமையாக,
“உண்மைய சொல்லு பா. நீ ஆபீஸ்ல இருந்து 3 மாதமாகுது Out ஆகி.. இப்போ எங்க வேலை செய்ற? பொய் சொல்லாதே பா” என்று கேட்டார்.
அந்த நிமிஷத்தில் அவர் உடைந்து போனார். கண்களில் கண்ணீர் வழிந்தது. அவரது அம்மாவும் நானும் அவரை ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தோம். அப்போது தான் அவர் உண்மையை வெளிப்படுத்தினார்.
மே மாதத்தில் அவர் Company யிலிருந்து வேலை நீக்கம் செய்யப்பட்டுவிட்டதாகவும் செலவுகளை Somehow.. manage செய்ய, ஜூன் மாதம் முதல் Food Delivery வேலை செய்ய ஆரம்பித்ததாகவும் சொன்னார்.
அவர் தினமும் காலை Formal dress ல வீட்டை விட்டு புறப்படுவார். அருகிலுள்ள ஒரு Public Restroom க்கு சென்று, அங்கே Delivery Uniform க்கு மாறி, முகக்கவசம் போட்டு Parcels Deliver செய்வார். இரவு திரும்பி வந்ததும் Bathroom க்கு சென்று குளித்து, மீண்டும் Formal Dress ல வந்து விடுவார்.
இந்த உண்மையை எங்களிடம் மறைத்ததன் காரணம் எங்களுக்கு தெரியவில்லை. நாங்கள் எப்போதும் அவரை கஷ்ட நேரங்களில் தவறாக நடத்தவே இல்லை. மாறாக, நாங்கள் அவருக்கு துணை நிற்கவே விரும்பினோம். ஆனால் அவர் தான் “Inferiority” காரணமாகவும், தொடர்ந்து தோல்வி தரும் Interview களாலும், Domain இல் வேலைகள் குறைவாக இருப்பதாலும் மனமுடைந்து போயிருந்தார்.
இப்போது அவரை எப்படி கையாள்வது என்றே எங்களுக்கு தெரியவில்லை. ஆனால் ஒன்றே ஒன்று அவரை கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதுதான்.
அவரது அனுமதியோடு தான் நான் இந்தக் கதையை பகிர்கிறேன். ஏனெனில், இவரைப் போலவே பல கணவர்கள் வேலை இழந்து குடும்பத்தைக் காண முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் ஒரு காலத்தில் தன்னம்பிக்கையுடன் இருந்தவர்கள். இப்போது சூழ்நிலை காரணமாக தடுமாறுகிறார்கள்.
வெளியே தெரியும் ஒரு பொறுப்புள்ள ஆணின் நடவடிக்கைகளை வைத்து அவன் உள்ளே கனன்று எரியும் பிரச்சனையை புரிந்து கொள்ளவது சற்று கடினம்..
அவர்களை மீண்டும் எழுப்பி நிறுத்துவது, அவர்களை ஆதரித்து, துணை நிற்பது அதுதான் ஒரு நல்ல குடும்பத்தின் பொறுப்பு.
உளவியல் ரீதியான பதிவு: எந்த தாய்லியோ உத்தியோகம் புருஷ லட்சணம்னு உருட்டிட்டு போயிட்டான். ஆனால் ஒரு மனசுக்கு புடிச்ச வேலை கிடைக்காமல், கிடைத்த வேலையை செய்து கொண்டு வாழ்க்கையை ஓட்டுவது எந்தளவுக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என்பது அனுபவித்தவர்களுக்கு தான் தெரியும்.
ஆண்கள் வயதுக்கு வரும் போது சுய இன்பம் செய்ய தானாக கற்றுக் கொள்வது போல, ஆண்கள் சுய தொழில் செய்யவும் கற்றுக் கொள்ள வேண்டும். தான் வாழும் சூழல், சமூகம் சார்ந்து பிழைத்துக் கொள்ள, சில சுய தொழில்கள் சார்ந்த அடிப்படையான Skills களை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒன்றுக்கு இரண்டு மூன்று தொழிலை கற்றுக் கொண்டால் அது வாழ்க்கையில் எப்போதாவது கை கொடுக்கும்.
Comments
Post a Comment