ஆண்களின் உள்ளாடைத் தெரிவுகள் அவர்களின் தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது. இருப்பினும், எல்லா ஆண்களிடமும் தமக்கான Perfect Fitting Underwear யைத் தேடிக் கொள்ள ஒரு தேடல் இயல்பாகவே இருக்கும். ஒரு ஆண் தான் அணியும் ஜட்டி தொடர்பில் முழுமையாக திருப்தியடையும் வரை, அவன் புது வகை ஜட்டிகளையும், புது Underwear Brands களையும் அணிந்து பார்க்க ஆசைப்படுவான். இந்த தேடலின் ஒரு பகுதியாக தனது தந்தை, அண்ணா, தம்பி, மாமா மற்றும் நண்பர்கள் அணியும் ஜட்டி வகைகள், ஜட்டி பிராண்ட்கள் தொடர்பிலும், சமூக வலைத்தளங்களில் அதிகம் பிரபலமாக உள்ள ஆண்களின் ஜட்டி தெரிவுகள் தொடர்பிலும் அதிகம் கூர்ந்து அவதானிப்பான். இதன் காரணமாகவே இந்த இளைஞர்களின் ஜட்டி தெரிவுகளை Influence செய்யும் விதமாக Social Media Influencers ஜட்டி கம்பனிகளிடம் பணம் பெற்று, அவர்களின் Underwear Waistband தெரிய Photos, Videos போடுவார்கள், அல்லது ஜட்டியோடு நின்று Photos, Videos போடுவார்கள். ஒரு ஆண் தனக்கு பொருத்தமாக உள்ள ஜட்டியை இனங்கண்டு விட்டால், அதனை அல்ல அந்த பிராண்ட்/வகை ஜட்டி தெரிவை அவன் இலகுவில் மாற்ற மாட்டான்.
Comments
Post a Comment