இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய தர்ப்பணம், திதி கொடுக்கும் ஆண்கள் வேட்டி அணிந்து அவற்றை செய்வது நமது சம்பிரதாயமாகும்.
அவ்வாறு வேட்டி கட்டிக் கொண்டு தர்ப்பணம் கொடுக்கும் போது அதன் இறுதியில் நீர் நிலையில் இறங்கி மூன்று முறை மூழ்கி எழுந்து நீராடுவது வழக்கம்.
சிரார்த்தம் என்பது, ஆட்டைத்திவசம்(வருஷாப்திகம்) அதாவது ஒருவா் இறந்து ஒரு ஆண்டின் பின் செய்யும் அபரக்கிரியைகளில் ஒன்றாகும். திவசம் என்பது ஆண்டுதோறும் அதே திதியில் செய்யப்படுவது ஆகும். இதனைத் திதி என்றும் கூறுவர்.
சிரார்த்தம் செய்யும் போது, அதன் இறுதியில் நீர் நிலையில் இறங்கி குளித்த பின்னர், அணிந்திருக்கும் வேட்டி, பனியன், ஜட்டி, சட்டை என அனைத்தையும் கழட்டி விடுவது வழக்கம். அவ்வாறு நீர் நிலைகளில் ஆடைகளை கழட்டி விடும் சம்பிரதாயமுள்ள பூஜைகளின் போது ஆண்கள் மிகவும் மெல்லிய கண்ணாடி போன்ற, விலை குறைந்த வேட்டிகளை அணிவது உண்டு.
அவை நீரில் நனைந்ததும் அவர்களின் உடலுடன் ஒட்டி, அவர்களின் அந்தரங்கத்தை அப்பட்டமாக வெளிக்காட்டி விடும் தன்மை உடையது. அதன் காரணமாகவே அவ்வாறான கண்ணாடி போன்ற(Transparent) மெல்லிய வேட்டிகளை அணியும் போது ஆண்கள் ஜட்டி அணிவது அவசியமாகிறது.
அணிந்திருக்கும் வேட்டி நனைந்து தமது அந்தரங்கம், அல்லது உள்ளே அணிந்திருக்கும் ஜட்டி வெளித்தெரிவதை மறைக்க விரும்பும் ஆண்கள் வேட்டியின் மேல் நிறத் துண்டை(சால்வை) துண்டு போல கட்டுவதும் உண்டு.
இருப்பினும் அந்த சடங்கின் இறுதியில் அணிந்திருக்கும் அனைத்து ஆடைகளையும், உள்ளாடைகளையும் களைந்து நிர்வாணமாகி வேறு வேட்டி கட்டிக் கொள்வது கடைமையாகிறது.
Comments
Post a Comment