எல்லா இளைஞர்களுக்கும் பச்சை குத்துவது மீது ஒரு ஆசை நிச்சயம் இருக்கும். ஆனால் அது தமது உடலில் நிரந்தரமாகி விடும் என்று பயத்தினாலேயே பலர் பச்சை குத்துவதற்கு தயங்குகின்றனர்.
அது மாத்திரமல்ல, சிறுவயதில் பச்சை குத்தினால், வளர்ந்து பெரியவனாகும் போது அந்த வரைந்த பச்சை சிதைவடைந்து போய் உருகுலைந்து இருக்கும். ஆகவே தான் பல ஆண்கள் தற்காலிகமான Tattoo களை அணிகிறார்கள்.
ஆண்கள், பெண்கள் என இருவரிடமுமே Tattoo குத்தும் பழக்கம் உள்ளது. ஆனால் பெண்களிடம் மாத்திரம் Tattoo வுக்கு பதிலீடாக இன்னொன்று உள்ளது. அது தான் மருதாணி(Henna). இந்த Henna உங்களுக்கு சருமப்பிரச்சனைகளை ஏற்படுத்தாவிட்டால், நீங்கள் அதனைப் பயன்படுத்திக் கூட Tattoo போன்று உருவங்களை வரைந்து கொள்ளலாம்.
சம்பிரதாயங்கள், கட்டுப்பாடுகளை மீறும் விதமாக ஆண்கள் நினைத்தாலும் தமது கைகளை மருதாணியால்(Mehendi) அலங்கரிக்க முடியும் என்பதை உலகறியச்செய்யும் விதமாக இந்தியாவின் சித்தார் இசைக்கலைஞர் Rishab Sharma தனது கைகளில் வரைந்திருந்த மருதாணி அலங்காரம் இன்று பங்களாதேஷில் உள்ள ஒரு முஸ்லிம் இளைஞனின்(Shahariars Mehendi) கைகளையும் Mehendi Cone பயன்படுத்தி அலங்கரிக்கும் அளவுக்கு சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
Comments
Post a Comment