Skip to main content

Posts

Showing posts with the label Religions

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


காவி வேட்டி கட்டும் ஆண்கள்

காவி வேட்டி என்பது காவி நிறத்தினால் ஆன வேட்டிகளைக் குறிக்கும். காவி வேட்டி என்பது காவி நிற சாயத்தால்(மூலிகைகள் அல்லது இயற்கை நிறமூட்டிகள்) சாயம் பூசப்பட்ட காட்டன் வேட்டியாகும். இது ஆன்மீகத்தில் துறவறத்தின் சின்னமாகவும், தியாகத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது.  இதுவும் ஒரு வகையான கலர் வேட்டியாகும். இருப்பினும் இது இந்து மதம் சார்ந்து அடையாளப்படுத்தப்பட்டுள்ளமையால், இதனை ஆண்கள் இந்து மதம் சடங்குகள், கோயில் திருவிழாக்கள், பூஜைகளின் போது அதிகம் அணிவர். இருப்பினும் இந்துகள் அல்லாத ஆண்களும் காவி வேட்டி அணியலாம். பொதுவாக இவை மஞ்சள், சிவப்பு நிறங்களை ஒத்து இருக்காது. அந்த நிற வேட்டிகள் தனியாக தெரியும். அநேகமாக செம்மஞ்சள், சந்தண நிறங்களில் வெளிர் சாயல் முதல், அடர் சாயல் வரை பல வகையான நிற சாயல்களில்(Shades) கிடைக்கும்.

தாயத்து அணியும் ஆண்கள்

தாயத்து(Amulet)/சுரை(Talisman), மந்திரித்த நூல் போன்ற மத நம்பிக்கை, சாதி நம்பிக்கை, சமூக நம்பிக்கை சார்ந்த அணிகலன்களை ஆண்கள் அழகுக்காகவும், நம்பிக்கைக்காகவும் அணிவர். ஆண்கள் அவற்றை பொதுவாக கழுத்தில் கட்டி தொங்க விடுவர், அல்லது மேற்கை/புஜத்தில்(Biceps) கட்டுவர். கோயில் நூல்களை மணிக்கட்டில் கட்டுவர். கண் திருஷ்டி படாமல் இருக்க, காத்துக் கறுப்பு அண்டாமல் இருக்க சில ஆண்கள் கணுக்காலில் கறுப்பு நிற கயிறு(Black Color Leg Anklet) கட்டுவர்.