Skip to main content

Posts

Showing posts with the label Black Rope

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் கணுக்காலில் கருப்பு கயிறு அணியும் முறை

தற்காலத்தில் பரவலாக இளைஞர்கள், மற்றும் யுவதிகள் கணுக்காலில் கறுப்பு கயிறு கட்டியிருப்பதை அவதானித்திருப்பீர்கள். அதனை சில திருஷ்டி கயிறு என்கிறார்கள். இருப்பினும் அநேகமானவர்கள் அதனை ஸ்டைலுக்காகவே அணிகிறார்கள். ஆனால் அதனை அணிவதன் மூலம் உடலின் அதிகப்படியான சூட்டை கறுப்பு கயிறு உறிஞ்சி, வயிற்று வலி மற்றும் ஏனைய நோய்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்றும் நம்புகிறார்கள். எந்த கிழமை கருப்பு கயிறை அணியலாம்? சனிக்கிழமை சிறந்தது. சனி ஹோரை அல்லது பிரம்ம முகூர்த்தத்தில் கட்டுவது முழு பலன் தரும். எந்த கால் கறுப்பு கயிற்றை அணியலாம்? ஆண்கள் வலது காலிலும், பெண்கள் இடது காலிலும் கட்டுவதே சாஸ்திர முறை (சூரிய/சந்திர நாடி). ஆனால் கவர்ச்சிக்காக அணிபவர்கள் அதனை விரும்பிய காலில் அணியலாம். எத்தனை முடிச்சுகள் போட்டு கயிற்றை காலில் கட்ட வேண்டும்? 9 முடிச்சுகள் போட்டு கட்ட வேண்டும். இது நவகிரக தோஷங்களை உடலுக்குள் விடாமல் தடுக்கும். குறிப்பு: கருப்பு கயிறு அறுந்து விழுந்தால் மீண்டும் தப்பி தவறி கூட கட்ட கூடாது உங்களை பிடித்த பீடை விலகி விட்டது என்று போய் விட வேண்டும்.

காலில் கருப்பு கயிறு அணிவது ஏன்?

இடது காலில் கறுப்பு கயிறு கட்டி கொள்வதால் தீய சக்திகள் நெருங்காது. கண் திருஷ்டி படாது. காலில் கருப்பு கயிறு காட்டுவதால் சனி, ராகு, கேது ஆகிய மூன்று கிரகங்களும் பலம் பெறும். சனீஸ்வர பகவானின் பார்வையின் வேகத்தை இந்த கறுப்பு கயிறு குறைக்கிறது. எதிர்மறை ஆற்றலின் தாக்குதல் குறையும். ஆனால் அவ்வாறு கணுக்காலில் கட்டும் கறுப்பு கயிறில் முடிச்சுகள் போட்டிருக்க வேண்டியது அவசியம், இதனை பிரம்ம முகூர்த்தத்தில் அல்லது நண்பகல் 12 மணிக்கு கட்டலாம். இதனை சனிக்கிழமையில் கட்டிகொள்வது சிறப்பு. நீண்ட கால தீராத நோய் இருந்தால், தோல் பிரச்னை இருந்தால், உடல் நல கோளாறுகள் இருந்தால், கறுப்பு கயிறை சனிக்கிழமை கட்டிக்கொள்ளலாம். ஆண், பெண் இருவருமே அணியலாம். ஆண்கள் வலது காலிலும், பெண்கள் இடது காலிலும் அணியவேண்டும். முக்கியமாக இளம்பெண்கள் அணிவது மிகச் சிறப்பு. அழகுக்காக மணிக்கட்டிலும், கணுக்காலிலும் கயிறு கட்டுபவர்கள் எந்தக் கையில், எந்தக் காலிலும் இவற்றை அணியலாம்.