Skip to main content

Posts

Showing posts with the label Accessories

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் ஏன் வெயிலுக்கு குடை பிடிக்க முடியாது?

வயசுப் பசங்க மழைக்கு குடை பிடித்தால் ஏற்றுக் கொள்ளும் இந்த சமூகம், வெயிலுக்கு குடை பிடித்தால் ஏதோ சீக்கு(நோய்) வந்தவனாக்கும் என்று மனசு நோகும் படி பேச ஆரம்பித்து விடும். அந்தளவுக்கு வயதுக்கு வந்த ஆண்கள் வெயிலுக்கு குடை பிடிப்பது தவறான ஒரு விடையமாக இந்த சமூகம் கருதுகிறது. ஒரு ஆண் பெண் துணையுடன் வெயிலில் செல்லும் போது வேண்டும் என்றால் குடை பிடிக்கலாம். ஆனால் ஒரு ஆண் எவ்வளவு உச்சி வெயிலில் வெளியே செல்வதாக இருந்தாலும் குடை பிடிக்க முடியாது. ஆண்கள் வெயிலில் வியர்க்க வேலை செய்யும் போது தான், உடல் பருமன் குறைந்து, அவர்களின் ஆண்மை வெளிப்படும் என நினைக்கிறார்கள். ஆண்கள் வெள்ளையாக, பிரிஜ்ஜில் வைத்த ஆப்பிள்கள் போல இருப்பதில் எந்த பிரயோசனும் இல்லை என்பதை நம்பும் இந்த சமூகம், ஒரு ஆணிடம் இருக்கும் ஆண்மையை அவன் வெயிலில் நொந்து நுடில்ஸாகி, கருவாடாக காயும் போதே ரசிக்கிறது. கடுமையான வெயிலுக்கும் கூட ஆண்களால் குடை பிடிக்க முடியாவிட்டாலும், அவர்கள் விரும்பினால் தொப்பி அணியலாம். கண்களுக்கு குளிர்ச்சியாக Cooling Glasses/Spectacles/Sun Glasses அணியலாம். வெயிலில் காய்ந்து முகம் கறுப்பாகாமல் இருக்க Sunscreen க...

தன்னினச் சேர்க்கையாளர்களை அடையாளப்படுத்தும் பொருட்கள்

ஒரு Straight ஆணுக்கு Gay Friends இருந்தால், அவனும் Gay ஆக மாட்டான். ஆனால் இந்த சமூகம் பல விடையங்களை தவறான கண்ணோட்டத்திலேயே பார்க்கிறது. ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களை(Gay, Bisexual), அதாவது தன்னினச்சேர்க்கையாளர்களை அவர்கள் அணியும்(Wearable) அல்லது அவர்களிடம் இருக்கும் பொருட்களை(Men Accessories) வைத்து பொதுவாக அடையாளம் காண்பர். அவற்றில் முக்கியமானது வானவில்(Rainbow) சம்பந்தப்பட்ட, அல்லது வானவில்லை அடையாளமாகக் கொண்ட அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள்(Bags, T-Shirt, Bracelet, Wrist Bands, Phone Cover) ஆகும். அதனைத் தவிர, ஒரு பக்க காதில் சிறிய வளையம் போன்ற தோடு அணிதல், Pink/Rose நிறங்களை அதிகம் பயன்படுத்துதல், பெண்களைப் போல அதிகம் அல்லது அடிக்கடி Facial/Make Up செய்வதும், உதட்டுக்கும் Lipstick பூசுவதும் பார்க்கப்படுகிறது. ஆனால் இவை இன்றைய காலத்தில் Sexual Orientation சார்ந்ததல்லாத, ஆண்களுக்கான இயல்பான விடையமாக சமூக வலைத்தளங்களின் பயன்பாடு மாற்றியுள்ளது. Keywords: Vaanavil, தன்னினச் சேர்க்கையாளர்கள் அடையாளமாகப் பார்க்கப்படும் வானவில்

தாயத்து அணியும் ஆண்கள்

தாயத்து(Amulet)/சுரை(Talisman), மந்திரித்த நூல் போன்ற மத நம்பிக்கை, சாதி நம்பிக்கை, சமூக நம்பிக்கை சார்ந்த அணிகலன்களை ஆண்கள் அழகுக்காகவும், நம்பிக்கைக்காகவும் அணிவர். ஆண்கள் அவற்றை பொதுவாக கழுத்தில் கட்டி தொங்க விடுவர், அல்லது மேற்கை/புஜத்தில்(Biceps) கட்டுவர். கோயில் நூல்களை மணிக்கட்டில் கட்டுவர். கண் திருஷ்டி படாமல் இருக்க, காத்துக் கறுப்பு அண்டாமல் இருக்க சில ஆண்கள் கணுக்காலில் கறுப்பு நிற கயிறு(Black Color Leg Anklet) கட்டுவர்.

கழுத்தில் சிறிய சங்கிலி அணியும் ஆண்கள்

ஆண்கள் தமது பொருளாதார நிலைமை, பண பலம், செல்வாக்கு போன்றவற்றை பல்வேறு வகையில் வெளிக்காட்டுவர். அதில் தங்க நகைகள் அணிவதும் அடங்கும். இருப்பினும், ஆண்கள் தமது கழுத்துக்கு அழகு சேர்க்கும் விதத்திலும், மேலாடை இன்றி இருக்கும் போது தம்மை மேலும் கவர்ச்சியாக வெளிக்காட்டவும் மிகவும் சிறிய தங்கச் சங்கிலியை கழுத்தில் அணிவர். அதன் மூலம் வெளித்தெரிவது அவர்களின் அழகாக மாத்திரமே இருக்கும்.

ஆண்கள் ஏன் கட் ஜட்டி அணிந்து லுங்கி, வேட்டி கட்ட வேண்டும்?

ஆண்கள் விரும்பினால் ஜட்டி கூட அணியாமல் லுங்கி, வேட்டி போன்ற ஆடைகளை அணிய முடியும். ஆனால் ஒட்டிக்கோ கட்டிக்கோ போன்ற Velcro Veshti களை தன்னம்பிக்கை அற்ற ஆண்கள் அணியும் போது அவர்களின் Purse, Phone, Vehicle/Room Key போன்றவற்றை வைக்க வசதியாக வேட்டியில் பாக்கெட் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால் சாதாராண வேட்டி அணியும் ஆண்மையுள்ள ஆண்கள் தமது Purse, Phone, Vehicle/Room Key வைக்க வேட்டி மற்றும் லுங்கியில் எதுவும் கொடுக்கப்பட்டிருக்காது. அப்படி இருக்கையில் பாக்கெட் வைத்த சட்டை அணிந்தால் அதன் பாக்கெட்டுக்களுள் சிலவற்றை அடசலாம். ஆனால் மிகுதியை என்ன செய்வது? கையில் கொண்டு திரிவது தான் ஒரே வழியா? பாக்கெட் வைத்த ஜட்டி(Boxer Briefs with Pockets) அல்லது சிறிய Shorts அணிந்து அதன் பாக்கெட்டுக்களுக்குள் கூட இவற்றை வைக்கலாம்.  ஆனால் அவை அந்தளவுக்கு பாதுகாப்பானவையா? விரும்பினால் தோளில் அல்லது இடுப்பில் மாட்டக் கூடிய சிறிய வகை Bag களை அணியலாம். ஆனால் அவை எல்லா இடங்களிலும் அனுமதிக்கப்பட்டிருக்குமா? என்பது சந்தேகம் தான்.