நீச்சல் அடிப்பது, நீந்துவது ஒரு உயிர்காக்கும் கலையாகும். இதனை ஆண்கள் அவசியம் கற்றுக் கொள்ள வேண்டும். வயதுக்கு வந்த ஆண்கள் ஜிம்மிற்குச் சென்று உடற்பயிற்சி செய்தால் அவர்களின் தேகம் கட்டுடலாகும்(Muscular).
ஆணழகன் போட்டிகளில் பங்குபற்றும் சிலரைப் பார்க்கும் போது பயத்தை ஏற்படுத்தும். அந்தளவுக்கு அவர்கள் இராட்சதர்கள்(Beast) போன்று தோற்றமளிப்பார்கள். சிலரைப் பார்க்கும் போது ஏதோ வேற்றுக் கிரகங்களில் இருந்து வந்த ஜந்துக்கள்/உயிரினங்கள் போன்று அகோரமாக இருப்பார்கள். அதன் காரணமாகவே சில பசங்க உடற்பயிற்சி செய்வதை தவிர்ப்பார்கள். ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்யும் பழக்கம் உள்ள ஆண்கள் அதனை இடை நடுவே நிறுத்தினால் மீண்டும் உடம்பு அதிகரிக்கும். நிறை கூடும்.
பசங்க பூப்படைந்த நாள் முதல் உடற்பயிற்சி செய்வது அவசியமாகும். அதன் மூலம் அவர்களின் தோற்றம் ஆண்மை மிக்கதாக மாறும். இருப்பினும் பூப்படைந்த ஆரம்ப காலத்திலேயே கடுமையான உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியமானது அல்ல. அது அவர்களின் இளமை தோற்றத்தை பாழாக்கி விடும். பார்க்கும் போது அதிக வயதுடையவர்கள் போன்ற தோற்றத்தை உருவாக்கும்.
நீந்துவது உடற்பயிற்சி மாத்திரமல்ல மன அழுத்தத்தை குறைக்கும் உளப்பயிற்சியும் ஆகும்.
இளமையான தோற்றத்தை தக்க வைத்துக் கொண்டு, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வயதுக்கு வந்த வயது முதல் ஆண்கள் குறைந்தது நீச்சல் பயிற்சியில் ஈடுபட வேண்டும். நீச்சலுடன் சைக்கிள் ஓட்டும் உடற்பயிற்சியும் செய்யலாம். ஜிம்மிற்கு சென்றால் கூட பாரம் தூக்கி(Weight Lifting) உடற்பயிற்சி செய்யாமல் சாதாரணமாக உடற்பயிற்சிகளை செய்யலாம்.
ஒருவர் நீச்சல் கற்றுக் கொண்டு, தினமும் நீச்சலடித்து பழகும் போது உச்சி முதல் உள்ளங்கால்கள் வரை சம அளவில் உடற்பயிற்சி செய்த பலன் கிடைக்கும். அதாவது குறைந்த சக்தியைப் பயன்படுத்தி முழு உடலுக்கும் தேவையான உடற்பயிற்சியைக் கொடுத்து தேக ஆரோக்கியத்தை மேம்படுத்தும் செயல் நீச்சல் ஆகும். அதே நேரம் நீச்சல் பயிற்சி மூலம் உடல் கட்டழகாக மாறினாலும் இளமையான தோற்றம் மாறாது. Gym Exercise போன்று எலும்புகளில், தசைகளில் அதிக தேய்மானங்கள் ஏற்படாது. மன ஆரோக்கியம் மேம்படும். பார்ப்பதற்கு ராட்சதர்கள் போன்ற தோற்றம் ஏற்படாது. மாறாக, இளவரசர்கள்(Prince) போன்ற கவர்ச்சியான தோற்றம் கிடைக்கும். நீங்களும் முயற்சி பண்ணி பார்க்கிறீர்களா?












Comments
Post a Comment