பாவெல் டுரோவ்(Pavel Durov), நாம் அனைவரும் திரைப்படங்கள், சீரிஸ் முதல் ஆபாச வீடியோக்கள் வரை எதனையும் எந்தவொரு கட்டுப்பாடுகளும் இல்லாமல் Download செய்யப் பயன்படுத்தும் Instant messaging app "Telegram" இன் ஸ்தாபகராவார்.
இவர் 10 October 1984 அன்று பிறந்தார். தற்போது 40 வயதாகும் அவருக்கு 100 இற்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ளன என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அது மாத்திரமல்ல தனது $10 Billion பெறுமதியான சொத்துக்களை அவரின் குழந்தைகள் அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்கவும் விருப்புவதாக ஒரு நேர்காணலில்(Interview) கூறியுள்ளார்.
பாவெல் டுரோவ் எவ்வாறு 100 க்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தந்தையானார்? அவர் பல பெண்களுடம் உடலுறவு வைத்துக் கொண்டால் மாத்திரம் தான் இது சாத்தியம் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் அவரிடம் விந்து தானம்(Sperm Donation) கொடுக்கும் பழக்கம் உள்ளதாம்.
நண்பனுக்காக நீங்க உங்க உயிரை கொடுப்பீங்களா? தனது நண்பர்கள் குழந்தை பெற்றுக் கொள்ள உதவியாக ஒரு Clinic இல் விந்தணு தானம் கொடுத்துள்ளார். ஆனால் அந்த விந்தை பயன்படுத்தி பலர் குழந்தை பெற்றுக் கொண்டுள்ளதாக விந்து சேமிக்கு வங்கி(Sperm Bank) மூலம் அவருக்கு பின்னர் தான் தெரிய வந்துள்ளது. அவருக்கு தற்போது மூன்று வாழ்க்கை துணைகளின் மூலம், நேரடியாக பிறந்த 6 பிள்ளைகள் உள்ளன.
தன் விந்து மூலம் பிறந்த குழந்தைகள் அனைத்தும் தனது குழந்தைகள் தான் என கருதும் பாவெல் டுரோவ், தான் இறந்த பின்னர் தனது சொத்துக்கள் அவர்களுக்கும் போய் சேர வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால் தான் இறந்த பிறகு அவர்களுக்கு கிடைக்காமல், அந்த குழந்தைகள் 30 வயதை கடந்த பின்னர் தான் அதனை ஆண்டு, அனுபவிக்க முடியும் எனும் வகையில் உயில் எழுதியுள்ளார்.
நேரடியாகவே இவர் கூட படுத்து குழந்தை பெற்றுக் கொள்ளும் அளவுக்கும் ஆளும் அம்சமா தான் இருக்காரு!
Comments
Post a Comment