பூப்படையும் வயதில் உள்ள ஆண்களுக்கு ஆண்மையை இயற்கையாக அதிகரிக்கக் கூடிய உணவுகளை அதிகம் கொடுக்க வேண்டும்.
ஆண்களின் உடலில் Testosterone அளவு அதிகரிக்கும் போது தான் அவர்களின் ஆண்மை விருத்தி ஆகும். திடமான ஆண்குறி உருவாகும். அதற்கு மீசை அரும்ப ஆரம்பிக்கும் வயதில் இருந்து முளைகட்டிய பயறு(Sprouts), பேரிச்சம்பழம், பாதாம்/பிஸ்தா(Nuts), கடலுணவு, இறைச்சி போன்றவற்றை சாப்பிட கொடுக்க வேண்டும்.
Vitamin D கிடைக்க வெயிலில் ஓடி, ஆடி விளையாட விட வேண்டும், நிச்சல் பயிற்சியில் ஈடுபட நிர்ப்பந்திக்க வேண்டும். அதன் மூலம் உடல் ஆரோக்கியமாக, ஆண்மையான தோற்றத்தில் வளர்ச்சியடையும்.
ஜிம்மிற்குச் சென்றாலும் சாதாரண உடற்பயிற்சிகளையே குறைந்தது 18 வயது வரை செய்ய வேண்டும். கட்டுடலாக்கும் உடற்பயிற்சிகளை சிறுவயதில் எடுத்துக் கொள்ள அனுமதிக்கக் கூடாது.
அவற்றை பின்பற்ற அனுமதித்தால் குழந்தையான தோற்றம் மாறிவிடும். விரும்பினால் குஸ்தி, கராத்தே போன்றவற்றை கற்றுக் கொள்ள அனுமதிக்கலாம்.
சிறுவயது முதலே போதைப்பொருட்கள், மதுபானம், புகைப்பிடிக்கும் பழக்கம் தொடர்பில் அச்சத்தை உருவாக்கவும். முடிந்தால் சிறுவர்களை புற்று நோய் வைத்தியசாலையை பார்வையிட கொண்டு செல்லலாம்.
சைக்கிள்(Bicycle) ஓட்டுறது எவ்வளோ பெரிய எக்ஸஸைஸ் தெரியுமா? ஆண்கள் சைக்கிள் ஓட்ட ஓட்ட தொடைகள் ரெண்டும் பலமாகும். தொடை பலமானா தம்பி(ஆண்குறி விறைப்பு) நல்லா எழுந்து நின்னு விளையாடுவான்.
இப்போ எல்லாம் மோட்டார் வண்டி மோகம் அதிகமானதால, ஆஸ்பிட்டல்ல நிறைய ஆண்கள் ஆண்மை குறைவுனு லைன்ல நிக்குறாங்க.
தொடைய பலமாக்குற பயிற்சிகள் உங்களுக்கு ஏதாச்சும் தெரிஞ்சுக்கனுமா?
பையனை தந்தையே குளிப்பாட்ட வேண்டும்: உங்களுக்கு இரண்டு மூன்று பசங்க இருந்தால் இருவரையும் ஒன்றாக குளிப்பாட்டி வர வேண்டும். அநேகமான பசங்க மற்ற ஆண்களைப் பார்த்தே பூப்படைவது தொடர்பான அறிவை வளர்த்துக் கொள்கிறார்கள்.
Read More: தந்தை ஏன் தனது பையனை சிறுவயது முதல் குளிப்பாட்ட வேண்டும்?
அண்ணனும் தம்பியும் தந்தையின் வழிகாட்டுதலில் வளரும் போது எதையும் தந்தையிடமே கேட்டுத்தெரிந்து கொள்ளும் அளவுக்கு நெருக்கம் உருவாகும்.
Comments
Post a Comment