தாரளாமாக ஆண்கள் தமது புருவங்களில் உள்ள முடிகளை கத்தரிக்கோலால் வெட்டி, Trimmer பயன்படுத்தி Trim செய்து அழகாக்கலாம்.
ஆண்களுக்கு புருவத்தில் மயிர்கள் அடத்தியாக இருப்பது தான் அழகு. அதனை பெண்கள் போல மெலிதாக்குவது சிறப்பாக இருக்காது. எல்லா ஆண்களுக்கும் புருவத்தில் முடி வளர்ச்சி நேர்த்தியாக இருக்காது. கண்டபாட்டுக்கு காடு போல அடத்தியாக வளரும் புருவத்தில் உள்ள முடிகளை கத்தரிக்கோலால் வெட்டி சீரமைக்கலாம். Razor, Trimmer பயன்படுத்தி Eyebrows யை Shape செய்யலாம். விரும்பினால் போர் வீரர்கள் போல புருவங்களில் வெட்டுக்களை உருவாக்கலாம்.
ஆண்கள் புருவங்களில் வளரும் முடியை சீராக்குவதற்கு முதலில் முகம் கழுவி, முகத்தில் உள்ள ஈரத்தை துடைத்து அகற்ற வேண்டும். பின்னர், கையால் கீழிருந்து மேல் நோக்கி தடவி புருவத்தில் உள்ள முடிகளை மேல் நோக்கி ஒதுக்க வேண்டும். அவ்வாறு ஒதுக்கும் போது சீரற்று இருக்கும் முடிகளை கத்தரிக்கோலால் வெட்டலாம்.
மூக்கினுள் உள்ள முடி, புருவம் போன்றவற்றை வெட்டி சீராக்குவதற்கு என்றே தனியாக ஒரு சிறிய கத்தரிக்கோல் வைத்திருக்கவும்.
Unibrow எனப்படும் புருவங்களுக்கும் இடையே, நெற்றியின் நடுவே வளரும் முடியை Hair Plucker(Tweezers) பயன்படுத்தி பிடுங்கலாம், அல்லது Razor மூலம் Shave செய்து அகற்றலாம்.
Keywords: தாடி, மீசை வெட்டுவது போல ஆண்கள் தமது புருவத்தையும் கவனிக்க வேண்டும்.
Comments
Post a Comment