தெற்காசிய நாடுகளில் உள்ள ஆண்களிடமும், ஆசிய நாடுகளில் உள்ள ஆண்களிடமும் லுங்கி கட்டும் முறைகளில் பல வேறுபாடுகள் உள்ளன. பங்களாதேஷ்ல வாரி சுருட்டி நடுவுல முடி போடுவாங்க. வடக்கனுங்க இடுப்ப சுத்தி சுருட்டி வைப்பானுங்க. கேரளால தைக்காத லுங்கிய வேட்டி மாதிரி கட்டுவாங்க. தமிழ்நாட்டிலயும் இலங்கையிலும் தான் இரண்டு பக்கம் Fold பண்ணி நேர்த்தியா கட்டுவாங்க.
சில நாடுகளைச் சேர்ந்த ஆண்களிடம் லுங்கியை மூட்டி, சாரமாக அணியும் பழக்கம் உள்ளது. லுங்கியின் முனைகளை மூட்டி ஒரு Tube போன்று உருவாக்குவதை சாரம் அடிப்பது என்பர்.
லுங்கியை மடிச்சு கட்டறதுல பல ரகம். சிவகார்த்திகேயன் மாதிரி கொஞ்சமா தூக்கி கட்டுற ஹோம்லி ஸ்டைல். வடிவேல் மாதிரி டிக்கி தெரியற காமெடி ஸ்டைல்.
லுங்கில எவ்ளோ Expose பண்ணா நல்லா இருக்கும்னு பார்க்கனும். குச்சி காலோ, பெருத்த தொடையோ இருந்தா காட்டாம இருப்பதே நல்லது.
லுங்கியை முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டுவது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் லுங்கியை ஏற்றிக் கட்ட பலருக்குத் தெரியாது.
லுங்கியை ஏற்றிக் கட்டுவது என்பது, லுங்கியை முழங்கால்களுக்கு மேல் மடித்து தூக்காமல், முழங்கால்களுக்கு மேல் லுங்கியை பிடித்து ஏற்றி இடுப்பிலோ அல்லது தொடைகளுக்கு நடுவிலோ கட்டுவதாகும்.
Comments
Post a Comment