அநேகமான முஸ்லிம் ஆண்கள் கண்களுக்கு மஸ்காரா, அல்லது இஸ்லாமிய மதம் சார்ந்த Kohl (also known as Surma/அஞ்சனக்கல் அல்லது கண்மை) எனப்படும் கண்களை சுத்தப்படுத்தும், கண்களை சூரிய ஒளி/தூசுகளிடம் இருந்து பாதுகாக்கும் மையை பயன்படுத்துகிறார்கள்.
பெண்களைப் போலவே ஆண்களுக்கும் மஸ்காரா கவர்ச்சியை அதிகரிக்க உதவும். ஆனால் ஆண்கள் கண்களை மாத்திரம் அழகு படுத்த மஸ்காரா பயன்படுத்துவதில்லை. மாறாக தாடி, மீசையை அடர்த்தியாக வெளிக்காட்டவும் மஸ்காராவை தாடி, மீசையின் மீது பூசுகிறார்கள்.
தலைமுடிக்கு பயன்படுத்தும் Hair Dye யை தாடி, மீசைக்கு பயன்படுத்தக் கூடாது. தற்காலத்தில் உடலில் உள்ள அனைத்து முடிகளுக்கும் பயன்படுத்தக் கூடிய Hair Dye கள் சந்தையில் விற்பனைக்கு உள்ளன.
விழாக்கள், திருமணம் போன்ற விசேட நிகழ்வுகளுக்குப் போகும் போது மீண்டும் Hair Dye பயன்படுத்தாமல், வெளித்தெரியும் நரை/வெள்ளை முடிகளை சரி செய்ய Quick Touch Up Hair Color Stick யை பயன்படுத்தலாம். தாடி, மீசைக்கு நிறச்சாயம் பூச விரும்பாத ஆண்கள், விழாவிற்கு போகும் போது அவற்றில் உள்ள வெள்ளை முடிகளை மறைக்க Beard Dye Stick - Beard and Mustache Touch-up Stick பயன்படுத்தலாம். அவற்றை அதன் மீது பூசினால் போதும். அவை Instant Waterproof Beard Dye Stick களாகும். ஆகவே அவற்றை அகற்ற Shampoo பயன்படுத்தி தலையை கழுவ வேண்டும்.
அடர்த்தியில்லாமல் வளரும் தாடி, மீசைய அடத்தியாக வெளிக்காட்ட Mascara பயன்படுத்தலாம். அதற்கென விசேடமாக தயாரிக்கப்பட்ட Beard Filler Pen களும் சந்தையில் உள்ளன.
Comments
Post a Comment