பார்த்தவங்க எல்லாரையும் எல்லோருக்கும் பிடிக்கும் என்று சொல்லி விட முடியாது. சிலரை எங்கேயோ இதற்கு முன்னர் பார்த்த மாதிரி இருக்கும். சிலரை முதல் தடவை பார்க்கும் போதே வெறுப்பையும் அருவருப்பையும் கக்க வேண்டி ஏற்படும்.
நாம் ஒருவரை பார்க்கும் போதே அவருக்கும் நமக்கும் எவ்வாறான உறவு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பது முடிவாகி விடும். சிலரை பார்த்தவுடன் பிடித்து விடும். சிலரை பார்க்க பார்க்கத்தான் பிடிக்கும். அப்படியே பிடித்தாலும் கூட அவர்களுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை ஏற்படாது.
நாம் முதலில் ஒருவரைப் பார்க்கும் போது நட்பு மலர ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்க்கும், நட்பு மலர்ந்து விட்ட பின்னர் நம்பிக்கைக்கான தேடல் உருவாகும், முழுமையான நம்பிக்கை பிறந்த பிறகு தான் உடலுறவு கொள்ளும் அளவுக்கு நெருக்கம் ஏற்படும்.
இதில் இனக்கவர்ச்சி, ஈர்ப்பு, உடலின் இயற்கையான மணம், குணம், தோற்றம், மொழி, இனம், சாதி, மதம் போன்ற பல விடையங்கள் செல்வாக்குச் செலுத்தும்.
இவற்றுள் காணப்படும் வரையறைகளே ஒருவருக்கு யார் மீது ஈர்ப்பு, நட்பு, காதல் மலர வேண்டும் என்பதை முடிவு செய்கிறது. ஒரு ஆணுக்கு பெண் மீது தான் ஈர்ப்பு ஏற்பட வேண்டும் என்றில்லை, இன்னொரு ஆண் அல்லது மூன்றாம் பாலினத்தவர் மீதும் ஈர்ப்பு, காதல் ஏற்படலாம்.
உண்மையான நட்பு/தோழமை என்பது தற்காலத்தில் அரிதாகி விட்டது. அநேகமானவர்கள் தமது தேவை சார்ந்தே நண்பர்களை உருவாக்கிக் கொள்கின்றனர். உன் நண்பன் யார் என்று சொல், நீ யார் என்று நான் சொல்கிறேன் என்பார்கள். அவ்வாறான நெருக்கமான நட்புகள் கூட நாளடைவில் வலுவிழந்து தூரமாகலாம்.
அதற்காக உண்மையான நண்பர்கள் இந்த உலகத்தில் இல்லை என்றில்லை. ஒரே படுக்கையில் அம்மணமாக கட்டிப்பிடித்துக் கொண்டு படுத்தாலும் செக்ஸில் ஈடுபடாத ஆண்களும் இந்த உலகத்தில் உள்ளனர். அவர்களுக்கிடையிலான நெருக்கமான பாசப்பிணைப்பு, நட்பை தாண்டிய உறவை Bromance என்பர். உயிர் நண்பன் என்பதற்கு வரைவிலக்கணம் இவர்கள் தான்.
சிலருக்கு சிலர் மீது கண்மூடித்தனமான ஈர்ப்பு ஏற்படும். அது அவர்களுடன் உடலுறவு வைத்துக் கொண்டால் தான் தீரும். அதனை Sexual Tension என்பர். இது மிகவும் ஆபத்தானது.
பார்த்தவுடன் படுத்து விடும் உறவுகளின் மத்தியில் உண்மையான காதலை தேடுவது சற்று சிரமமாகும். ஆனால் அது முடியாத காரியம் இல்லை.
செக்ஸ் செய்வதை இரண்டாம் பட்சமாக கருதி நன்கு பழகி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டால் அந்த உறவுகள் நீண்ட காலம் நிலைத்து நிற்கும்.
Comments
Post a Comment