ஒரு ஆண் வயசுக்கு வந்ததன் அடையாளமாக அவனின் ஆண்குறியின் முன் தோலை பின்னால் நகர்த்தி, ஆண்குறியின் மொட்டை வெளியே எடுக்கக் கூடிய இயலுமையை கருதலாம்.
ஆனால் ஆண் குழந்தைகளுக்கு சிறு வயது முதலே கூட, அதாவது பூப்படையும் முன்னர் கூட ஆண்குறியின் முன் தோலை(Foreskin) பின்னால் நகர்த்தி அதன் மொட்டை(Glans) சுத்தப்படுத்த முடியும் என்கிறார்கள் வைத்தியர்கள். ஆனால் எல்லா ஆண்களுக்கும் அது சாத்தியமா என்பது சந்தேகம் தான்.
ஆண்களுக்கு அவர்களின் ஆண்குறியின் முன் தோலுக்கும், ஆண்குறியின் மொட்டிற்கும் இடைப்பட்ட பகுதியில் மாவு பசை, எண்ணெய் பசை போல தோல் அழுக்குகள் படிவது இயல்பாகும். அதனை தினமும் குளிக்கும் போது கழுவி சுத்தம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் கிருமி தொற்றுக்கள், துர்வாடை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
ஒரு ஆண் குழந்தை பிறந்து 3 - 4 வயது ஆன பின்னர், அந்த பையனின் ஆண்குறியின் முன் தோலை பின்னால் நகர்த்தக் கூடியதாக இருக்கும் என்கிறார்கள். ஆனால் அநேகமான ஆண்கள், அவர்கள் வயதுக்கு வந்த பின்னர் தான்(10 -14 வயதின் பின்னர்) அவர்களின் ஆண்குறியை புழுத்தவே ஆரம்பிக்கிறார்கள். ஆண்கள் பூப்படையும் போது தான் ஆண்குறியின் மொட்டை மூடியிருக்கும் முன்தோல் இலகுவாக விரிவடைந்து, ஆண்குறியின் மொட்டை மலரச் செய்கிறது. ஆகவே உங்களுக்கு(உங்கள் பையனுக்கு) மருத்துவ பிரச்சனைகள் எதுவும் ஏற்படாவிட்டால் மீசை அரும்பும் வரை காத்திருப்பது உகந்தது.
Read More: ஆண்கள் பூப்படைவது தொடர்பான தமிழ் வழிகாட்டுதல்
ஒரு ஆணுக்கு 15 - 18 வயது கடந்தும் அது முடியாவிட்டால், அதாவது ஆண்குறியின் முன் தோலை பின்னால் நகர்த்தி ஆண்குறியின் மொட்டை வெளியே எடுக்க முடியாவிட்டால், அவசியம் தந்தையுடன் இது தொடர்பில் கலந்துரையாடி, வைத்திய ஆலோசனை பெற வேண்டும். சில ஆண்களுக்கு காலம் கடந்து கூட ஆண்குறியின் மொட்டை மூடியிருக்கும் முன்தோல் விலகுவது உண்டு.
Recommended: வயசுக்கு வந்த பின்னரும் ஆணுறுப்பில் முன் தோல் உரியவில்லையா?
சிறுவர்களுக்கு ஆண்குறியின் முன்தோலில் வீக்கம் ஏற்பட்டு, சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஏற்பட்டு, கிருமி தொற்றுக்கள் அல்லது சிறுநீர் தொற்று(Urinary Track Infection) ஏற்பட்டு வைத்தியசாலைக்குச் சென்றால் வைத்தியர் பரிந்துரைக்கும் முதல் விடையம் ஆண்குறியின் முன்தோலை பின்னால் நகர்த்தி, அதன் மொட்டை சுத்தம் செய்வதாகும்.
ஆனால் ஆண்குறியின் மொட்டை மூடியிருக்கும் முன் தோல், அதுவாகவே கழற ஆரம்பித்த பின்னர் தான் அப்படி செய்ய வேண்டும் என்கிறார்கள். உங்கள் பையன் வலிக்குது என்று கூறியும் அதனை பின்னால் நகர்த்துவது கூடாது. இந்த விடையத்தில் ஒரு தந்தையின் உதவி பையனுக்கு அவசியம் தேவைப்படலாம்.
அவ்வாறு ஆண்குறியின் முன் தோலை நகர்த்தக் கூடியதாக இருந்தால், அதனை நீரினால் மாத்திரம் கழுவி சுத்தம் செய்ய வேண்டும். ஒரு வேளை ஆண்குறியின் மொட்டு காயப்பட்டது போல சிவந்து போயிருந்தால், வீங்கினால், அதில் இரத்த கசிவுகள் தென்பட்டால், அவசியம் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். சிறுவயதில் ஆண்குறியின் முன் தோலில் ஏற்படும் காயங்கள் காரணமாகக் கூட வயதுக்கு வந்த பின்னர், ஆண்குறியின் முன் தோலை பின்னால் நகர்த்துவதில் பிரச்சனை ஏற்படலாம்.
உங்கள் பையனுக்கு சிறுநீர் தொற்று அடிக்கடி ஏற்பட்டும், ஆண்குறியின் முன் தோலில் அடிக்கடி வீக்கம் ஏற்பட்டும் உங்களால் வைத்தியர் கொடுத்த Cream யை பயன்படுத்தி சரி செய்ய முடியவில்லை என்றால், ஆண்குறியின் முன் தோலை பின்னால் நகர்த்த முடியவில்லை என்றால் உங்கள் பையனுக்கு சுன்னத்(Circumcision) செய்து, ஆண்குறியின் மொட்டை மூடியிருக்கும் முன் தோலை நீக்குவது தான் சிறந்தது.
உங்களுக்குத் தெரியுமா? ஆண்களின் ஆண்குறியின் முன் தோல் உள்ள ஆண்கள், அதாவது சுன்னத் செய்யாத ஆண்கள் குளிக்கும் போதும் சிறு நீர் கழிக்கும் போதும் அவர்களின் ஆண்குறியின் மொட்டை பின்னால் நகர்த்தி, ஆண்குறியின் மொட்டை வெளியே எடுக்க வேண்டும். அதன் மூலம் சிதறாமல் இலகுவாக சிறுநீர் கழிக்கக் கூடியதாக இருக்கும். ஆண்குறியை சுத்தம் செய்வதும் இலகுவாக இருக்கும்.
Comments
Post a Comment