நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி(Virat Kohli) யினால் பிரபலமான ஆண்கள் தாடி வளர்க்கும் கலாச்சாரம் முடிவுக்கு வருகிறதா என்று நெட்டிசன்கள் கதறத் தொடங்கியுள்ளனர்.
அதற்குக் காரணம், அண்மையில் நடந்த ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின்(Asia Cup 2025) போது பதிவான Abhishek Sharma மற்றும் Shubman Gill இருவரும் ஒன்றாக இருக்கும் காட்சி தற்போது வைரலாகி வருகிறது.
அதில் இருவரும் தாடி இல்லாமல் Baby Face உடன் காட்சியளிப்பதை பார்த்த பலர், விராட் கோலி கொண்ட ஆண்மைக் கோலம் இவர்களிடம் எங்கே என்று கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளனர்.
அது மாத்திரம் அல்லாது, சிலர் அவர்களுக்கு AI யின் உதவியுடன் தாடி மீசை வைத்தும் அழகு பார்க்க ஆரம்பித்துள்ளனர். உண்மையில் ஆண்களுக்கு தாடி, மீசை முக்கியமா?
தெற்காசிய நாடுகளைப் பொறுத்தவரையில் தாடி, மீசை வளர்ப்பது என்பது ஆண்மையில் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. ஆம்பளைன்னா உடம்பு முழுக்க காடு போல முடி வளர்ச்சி இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் அது ஒருவரது தனிப்பட்ட விருப்பு வெறுப்பு சார்ந்த விடையமாகும்.
தனக்கு தாடி, மீசை வைத்தால் அழகாக இருக்குமா? அல்லது அதனை முழுமையாக மழித்தால் அழகாக இருக்குமா என்பதை அவன் தான் முடிவு செய்ய வேண்டும். அது மாத்திரம் இல்லை. தாடி, மீசை வளர்ப்பது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியம் இல்லை. வளரும் தாடி, மீசையை நேர்த்தியாக வெட்டி செம்மைப்படுத்த வேண்டும். இதன் காரணமாகவே விராட் கோலிக்கு அதிகம் பிரபலமாக Trimmer Brands, Grooming Brands களின் விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பும் அமைந்தது.
சில வருடங்களுக்கு முன்னர் விராட் கோலி தனது தாடி, மீசைக்கு நிறச்சாயம்(Beard Dye) பயன்படுத்தாமல் Salt and Pepper Look உடன் பகிரப்பட்ட படத்தினால், பலர் விராட் கோலியையே வறுத்து எடுத்தனர். அதனை நக்கல் செய்யும் விதமாக, போற போக்கை பார்த்தால் நான் எனது தாடி, மீசைக்கும் இன்சூரன்ஸ் போட வேண்டும் போல் உள்ளதாக #ViratBeardInsurance Hashtag உடன் பதிவிட்டிருந்தார். அதன் பின்னர் மீண்டும் தாடி, மீசைக்கு Dye அடித்து ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றியிருந்தார்.
Comments
Post a Comment