வசதியா எந்த கவலையும் இல்லாத புசுபுசுன்னு வாட்ட சாட்டமா வளர்ந்த பையனுக்கும், கஷ்டத்துல சொங்கியா பார்க்க பழைய துணியோட சுத்துற பையனுக்கும் சிந்தனை, செயல் திறன்ல ஏதாவது வித்தியாசம் இருக்குமா?
நிச்சயமா இருக்கும். வசதியான குடும்பத்துல வளர்ந்த பையன் பெரிசா எதுக்கும் கவலைப்பட மாட்டான். எதையும் போராடி பெற நினைக்க மாட்டான். ஓரளவுக்கு எல்லாமே சுலபமா கிடைச்சிரும். அவனோட கவலை எல்லாம் அடுத்த மாடல் iPhone எப்படி வாங்குறதுன்ற லெவல்ல தான் இருக்கும். அவன் போட்டிருக்கிற ஜட்டி லேசா அழுக்கானாலும் புது ஜட்டி வாங்கி போட்டுப்பான். தன்னிறைவடைந்தவனாக(Complacent) இருப்பான்.
ஆனால் வசதி இல்லாத குடும்பத்துல வளர்ந்த பையன், பட்டன் பிஞ்சி போன சட்டைக்கு பின் குத்துறதுல ஆரம்பிச்சு ஒவ்வொரு விசயத்துலயும் இருக்கறத வச்சி எப்படி நல்லா வாழனும்னு முயற்சி பண்ணிட்டே இருப்பான். கடைசி சொட்டு வரைக்கும் டீயை குடிப்பான். வீணாக்க மாட்டான். கொட்டை வெளியில் தொங்கிற அளவுக்கு ஜட்டியில் ஓட்டை விழுந்தால் கூட அதை இன்னும் சில காலம் பயன்படுத்துவான். ஆள் ஒல்லியா இருந்தாலும் உள்ளுக்குள்ள ஒவ்வொரு பிரச்சினைக்கும் போராட ஒரு தீ எரிஞ்சிட்டே இருக்கும். வாய்ப்பு கிடைக்கும் போது எரிமலையா வெடிப்பான்.
அதுக்கு உதாரணம் மகாகவி பாரதி. பாரதின்னாலே ஷாயாஜி ஷிண்டே மாதிரி 40-45 வயசுன்னு நினைக்கிறொம். அவன் சாகும் போதே 30 வயசுதான். அதுக்குள்ளவே 90 வயசு வரைக்கும் எழுத வேண்டியதை எழுதி தள்ளிட்டான். ஏழ்மை, ஏமாற்றம், ஒல்லியா , பலவீனமா இருப்பான். கஞ்சா வலிச்சு கன்னம் எல்லாம் ஒட்டி போச்சு. தாடி வளர்த்து டொக்கை மறைச்சான். வெள்ளைக்காரனை எதிர்த்து அந்த அசட்டு பிராமணனால என்ன செய்ய முடியும்? அழிக்கவோ, அடிக்கவோ, தடி எடுக்கவோ , துப்பாக்கி தூக்கவோ அவன் உடம்புல தெம்பு இல்ல.
ஆனால் "பாதகம் செய்பவரை கண்டால் நீ பயங்கொள்ளல் ஆகாது பாப்பா. மோதி மிதித்து விடு பாப்பா, அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா"ன்னு எழுதினான். உடல் பலத்தால் அதிகார பலத்தால் பண பலத்தால் அமுக்கி வைக்கும் போது எதிர்த்து அடிக்க முயலைன்னாலும் மூஞ்சி மேல காறி துப்பும் தைரியம், அதுதான் ஏழ்மை கொடுக்கும். பத்து பேர் முன்ன காறி துப்புற தைரியம் துப்பாக்கி தூக்கறவனுக்கு இருக்காது.
ஒருமுறை தமிழ் நாட்டுக்கு வந்த காந்தியை பார்க்க போனான். காந்தி மீட்டிங்ல இருக்கார். வெயிட் பண்னூங்கன்னு சொன்னாங்க. "என்னால் காத்திருக்க முடியாது. வேணும்னா அவரை வந்து பார்க்க சொல்" ன்னு சொல்லிட்டு போயிட்டான். ஆள் சல்லையா இருந்தாலும் உள்ளுக்குள்ள அவ்ளோ கெத்து.
அதுக்காக இளைஞர்கள் ஏழையா, ஒல்லியா சுப்பையா இருக்கணும்னு சொல்லல. அவனுக்குள்ள இருக்கற அக்கினி குஞ்சை அழியாம வச்சிக்கனும். அப்போதுதான் வாய்ப்பு கிடைக்கும் போது சுடராக ஒளிர்வான்.
Comments
Post a Comment