லங்கோட்(Langot) என்பது வட இந்தியர்கள், குறிப்பாக குஸ்தி விளையாட்டு விளையாடும் ஆண்கள், பயில்வான்கள்(Wrestlers) அணியும் பாரம்பரிய உள்ளாடையாகும். இது நம்ம ஊர் ஆண்கள் அணியும் கோவணத்திற்கு நிகரானது. ஆனால் Langot அணிவதற்கு ஆண்களின் இடுப்பில் அரைஞாண் கயிறு கட்டியிருக்க வேண்டிய அவசியம் இல்லை.
Langot என்பது ஒரு வகை Supporter Underwear ஆகும். அது மேற்கத்தேய உள்ளாடையான Jockstrap ஜட்டிக்கு நிகரானது மாத்திரமல்ல. Jockstrap ஜட்டியை விட சிறந்தது. Jockstrap அணியும் போது அதன் இறுக்கத்தையும், அது ஆண்களின் அந்தரங்கப் பகுதிகளுக்கு கொடுக்கும் Support யையும் தேவைக்கு ஏற்ப மாற்றியமையக்க முடியாது. அதே நேரம் Jockstrap ஜட்டிகளின் பின்பக்கம் மறைக்கப்படுவதில்லை. அதனால் அதனை அணிந்திருக்கும் போது ஆண்களின் குண்டிகள் அப்பட்டமாக வெளித்தெரியும்.
ஆனால் லங்கோட் அப்படியல்ல. ஆண்கள் தமது தேவைக்கு ஏற்ப அது அவர்களின் அந்தரங்கப் பகுதிகளுக்கு கொடுக்கும் இறுக்கத்தை மாற்றையமைக்க முடியும். புட்டப்பகுதியும் இதில் மறைக்கப்படுவதனால் ஆண்களின் குண்டிகள் அப்பட்டமாக வெளித்தெரியாது.
ஆகவே ஆண்கள் விரும்பினால் லங்கோட் அணிந்தும் பாரம் தூக்கும்(Weight Lifting) உடற்பயிற்சிகளில் ஜிம்களுக்கு சென்று ஈடுபடலாம். Jockstrap ஜட்டி போன்றே லங்கோட்டும் ஆண்களுக்கு அந்தரங்கப் பகுதிக்கு தேவையான சப்போட்டை கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.
Comments
Post a Comment