வயது வந்த ஆண்கள் தமது உடல் சுத்தம் தொடர்பில் அதிகம் அக்கறை கொள்ள வேண்டும். உங்கள் அன்புக்குரியவர்கள் தவிர்ந்த ஏனையவர் யாரும் உங்கள் உடலில் இருந்து கெட்ட வாடை வீசுகிறது என்று நேரடியாக உங்களிடம் சொல்ல மாட்டார்கள். ஆனால் நேர்த்தியாக குளித்து உடலை சுத்தம் செய்யாவிட்டால், Deodorant பயன்படுத்தாவிட்டால், துவைத்த/சுத்தமான ஆடைகள் உள்ளாடைகளை அணியாவிட்டால் உங்களின் தூய்மை கேள்விக் குறியாகிவிடும்.
ஒரு ஆண் சுத்தமாக இருக்கிறானா? அவன் உடலை சுத்தம் செய்வது சரியா? அது அவனுக்கு போதுமா என்பதை அவனது வியர்வை வாடையை முகர்ந்து பார்த்தால் தான் தெரியும். அதற்காக உங்கள் அக்குளை நீங்கள் முகர்ந்து பார்த்தால்(மணந்து) உங்களால் அதனை இனங்காண முடியாது. அப்புறம் எப்படி அதனை இனங்காண்பது?
நீங்கள் அணிந்து, கழட்டிய ஜட்டி, பனியன் போன்ற உள்ளாடைகளை எடுத்து முகர்ந்து பார்த்தால் உங்கள் தூய்மையின் இலட்சணம் புலப்பட்டு விடும். அதனை வைத்து இன்னும் எந்தளவுக்கு நீங்கள் உடல் சுத்தம், சுகாதாரம் தொடர்பில் அக்கறை கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
Read More: வயதுக்கு வந்த ஆண்கள் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார பழக்கவழக்கங்கள்
Keywords: நீங்கள் அணிந்த ஜட்டியை மணந்து பார்த்தால் உங்கள் தூய்மையின் லட்சனம் தெரியும்.
Comments
Post a Comment