ஒரு நபருடன் நீங்கள் கை குலுக்கும் போது அந்த நபர், வேறு யாரும் பார்க்காத வகையில் உங்கள் உள்ளங்கையை சுரண்டினால், அவர் உங்களை தனிமையில் சந்திக்க அழைப்பதாக அர்த்தம். ஒரு நபர் உங்கள் எதுக்கு தனிமையில் சந்திக்க வேண்டும்?
உங்களுடன் பாலியல் ரீதியான தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ளத்தான் அவர் உங்களை தனிமையில் சந்திக்க அழைக்கிறார். இதனை ஒரு ஆண், பெண்ணுக்கு அல்லது ஒரு பெண், ஆணுக்கு மாத்திரம் செய்யமாட்டார்கள். ஒரு ஆண் இன்னொரு ஆணுக்கு, அல்லது ஒரு பெண் இன்னொரு பெண்ணுக்கு, அல்லது திருநங்கை/திருநம்பி இன்னொரு ஆண்/பெண்ணுக்கு கூட செய்யலாம்.
ஊசி இடம் கொடுத்தால் தான் நூல் நுழையும் என்பார்கள். அதன் காரணமாக, மறைமுகமான இவ்வாறான சுரண்டல்களை வைத்து ஒருவரின் உள்நோக்கத்தை அறியக் கூடியதாக இருக்கும். அதே நேரம் உங்களுக்கு அவருடன் உடலுறவு கொள்ள விருப்பம் இல்லாவிட்டால், உங்களால் அவரிடம் இருந்து விலகியிருக்க முடியும்.
Read More: இது போன்ற பல பாலியல் சார்ந்த சைகைகள், சமிக்ஞைகளை ஆண்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்துகிறார்கள்.


Comments
Post a Comment