அடிக்கடி செய்தால் அலுப்பு ஏற்பட்டு விடும் விஷயங்களில் மிக முக்கியமானது உடலுறவு/செக்ஸ் ஆகும். அதே போல தான் ஒருவரது நிர்வாணக் கோலமும். என்னதான் உருகி உருகி காதலித்து கல்யாணம் செய்தாலும், காதலித்தவரை அடிக்கடி தேவையில்லாமல் நிர்வாணமாகப் பார்த்தால் வெறுப்பும் சலிப்பும் தான் ஏற்படும்.
எதையும் ஒழிவு மறைவாக வெளிக்காட்டும் போது தான், அதன் மீது ஆசையும், திரும்ப திரும்ப பார்க்க வேண்டும் என்ற விருப்பமும் ஏற்படும்.
அந்த வகையில் கணவனும் மனைவியும் ஒரு நாளும், உடலுறவு கொள்ளும் நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் முழு நிர்வாணமாக ஒருவர் முன் ஒருவர் தோன்றக் கூடாது. ஒரே படத்தை அடிக்கடி பார்த்தால் எப்படி சலிப்பு ஏற்படுமோ, அது போல தான் ஒருவரின் நிர்வாணமும்.
அதன் காரணமாகவே திருமணம், தாம்பத்திய வாழ்க்கை தொடர்பான "ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்" என்ற பழமொழி இன்னமும் மாறாமல் உள்ளது.
Comments
Post a Comment