இந்த கேள்வி ஏன் உருவானது? யார் அந்த புள்ளி ராஜா? அவருக்கு ஏன் ஏயிட்ஸ் வரனும்? எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றியும் பிரச்சாரம் செய்ய NACO (நேஷனல் எய்ட்ஸ் கண்ட்ரோல் ஆர்கனைசேஷன்) பெரும் முயற்சி எடுத்தது. அப்போது ஒரு மனிதனுக்கு எய்ட்ஸ் எதனால் வரும் மற்றும் எதனால் வராது என்று விளக்க முயற்சித்தது. அதற்காக எந்த ஒரு மத, ஜாதி, இனத்தையும் சாராத தமிழ் ஆண் பெயர் தேவைப்பட்டது. அவர்கள் அப்படி மூளையைக் கசக்கிக் கொண்டு கண்டு பிடித்த கற்பனைப் பெயர்தான் புள்ளி ராஜா!
அப்படி ஆரம்பித்த விழிப்புணர்வுப் பிரசாரம்தான் "புள்ளிராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா? " என்ற கேள்வியும் அதைத் தொடர்ந்து அவர்களே கொடுத்த பதில்களும்.
"தொப்பி" யைத்தான் புள்ளி ராஜா என்கிறார்களா?
கள்ள உறவில் ஈடுபடும் ஆண்கள் பலர், அவசரத்தில் தொப்பியை மாட்டுவதில்லை. தொப்பி வழுவழுப்பாக இருப்பதால் தொப்பியை(Male Condom - Code Word) மாட்ட சிலர் விரும்புவதில்லை.
இதற்காக, தொப்பி தயாரிக்கும் கம்பெனி, இயற்கையாக சொற சொறப்பாக இருப்பதற்கு, தொப்பியின் மீது நிறையப் புள்ளிகள் வைத்தார்கள்.
அரசு, தொப்பி தயாரிக்கும் கம்பெனிகளுக்கு நிறைய மானியம் சலுகைகள் அறிவித்து, அரசே தொப்பி கம்பெனிகளுக்கு விளம்பரமும் செய்தது. விளம்பரத்தை ஒரு புதிர் போல் அமைத்து சமூகத்தில் அதனை ஒரு பேசு பொருளாக மாற்றினர். அப்போது வந்ததுதான் இந்த விளம்பர வாசகம். அதனால் தான் இன்றும் புள்ளி ராஜா பலரால் நன்கு அறியப்படுகிறார்.
Comments
Post a Comment