தாயத்து(Amulet)/சுரை(Talisman), மந்திரித்த நூல் போன்ற மத நம்பிக்கை, சாதி நம்பிக்கை, சமூக நம்பிக்கை சார்ந்த அணிகலன்களை ஆண்கள் அழகுக்காகவும், நம்பிக்கைக்காகவும் அணிவர்.
ஆண்கள் அவற்றை பொதுவாக கழுத்தில் கட்டி தொங்க விடுவர், அல்லது மேற்கை/புஜத்தில்(Biceps) கட்டுவர். கோயில் நூல்களை மணிக்கட்டில் கட்டுவர்.
கண் திருஷ்டி படாமல் இருக்க, காத்துக் கறுப்பு அண்டாமல் இருக்க சில ஆண்கள் கணுக்காலில் கறுப்பு நிற கயிறு(Black Color Leg Anklet) கட்டுவர்.
தாயத்து(Amulet)/சுரை(Talisman), மந்திரித்த நூல் போன்றவற்றை கழுத்தில் தொங்க விட விரும்பாதவர்கள், மேற்கையில் கட்டிக் கொள்ள விரும்பாதவர்கள், அல்லது மணிக்கட்டில் கட்டிக் கொள்ள விரும்பாதவர்கள், யாரும் இலகுவாக பார்த்து விட முடியாத, அவர்களின் இடுப்புப் பகுதியில், அரைஞாண் கயிற்றுடன் சேர்த்து அணிவர்.
தாயத்து அல்லது சுரையில் பல வகைகள் உள்ளன. வெளி நாடுகளில் அவை Pendant போன்றும் இருப்பது உண்டு. சிலர் மாந்திரீக சக்கரங்கள் வரைந்த Pendant களையும் தாயத்தாக அணிவது உண்டு.
ஆனால் நம்ம ஊர்ல தாயத்து/சுரை என்பது ஒரு உலோக சுருள்/உருளை போன்று இருக்கும். அதனுள் மந்திரம் எழுதிய செப்பு தகடு, ஏனைய மத நம்பிக்கை, கலாச்சார நம்பிக்கை, சமூக நம்பிக்கை, மற்றும் மாந்திரீகம் சார்ந்த பொருட்கள் இருக்கும்.
உதாரணமாக, உலர்ந்த தொப்புள் கொடி, உலர்ந்த சுன்னத் செய்யும் சடங்கின் போது வெட்டப்பட்ட ஆண்குறியின் முன் தோல், முதல் முறை சிரைக்கப்பட்ட சுன்னி முடி, அக்குள் முடி, தாடி/மீசையை எரித்த சாம்பல், உலர்த்திய முதல் முறை வெளியேற்றிய விந்தினை நனைத்த வெள்ளை துணி, மாந்திரீக மைகள், செப்பு தகடுகள்


Comments
Post a Comment