இடுப்பு அளவையும், உடல் அமைப்பையும், ஆண்குறியின் அளவு மற்றும் அதன் வகை, குண்டிகளின் அளவு மற்றும் அதன் வகை, தொடைகளின் அளவு போன்றவற்றை மாத்திரம் கருத்தில் கொண்டு அண்கள் ஜட்டி வாங்க வேண்டும். ஆனால் அதற்காக கண்களை மூடிக் கொண்டு ஜட்டியின் நிறத்தெரிவுகளை மேற்கொள்ளக் கூடாது.
நீங்கள் அன்றாடம் அணியும் ஆடைகள், இனி மேல் அணியப் போகும் ஆடைகள் தொடர்பிலும் இதில் கவனம் செலுத்த வேண்டும். உதாரணமாக வெள்ளை நிற ஆடைகளை அதிகம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் ஆண்கள் அதிகம் Bright ஆன நிறங்களை தெரிவு செய்யக் கூடாது. உதாரணமாக: Red, Yellow, Light Green, Light Blue, Orange, Pink
அந்த நிறங்கள் நீங்கள் அணியும் வெள்ளை நிற ஆடையூடாக ஊடுருவி வெளித்தெரிய அதிக வாய்ப்பு இருக்கும். வெள்ளை நிற ஆடைகளின் துணி மிகவும் மெல்லியதாக இருந்தால், நீங்கள் அணிந்திருக்கும் ஜட்டியின் நிறம் அப்பட்டமாக வெளித்தெரியும்.
அதனை சரி செய்ய ஆண்கள் அவர்களின் தோலின் நிறத்தை ஒத்த நிறமுடைய ஜட்டிகளை வாங்கி அணியலாம். உதாரணமாக: Brown, Butter Color, Grey
இவற்றையெல்லாம் விட, நீங்கள் அணியும் ஜட்டி உங்களை கவர்ச்சியாக வெளிக்காட்ட வேண்டும். அதற்கு உங்கள் ஜட்டியின் நிறத்தெரிவுகள் உங்களுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.
Printed Underwear Vs. Plain Color Underwear - எல்லா ஆண்களுக்கும் பூப்போட்ட ஜட்டிகள், Abstract Art/Designs Print செய்யப்பட்ட ஜட்டிகள் அழகான தோற்றத்தை கொடுக்காது. ஆனால் எல்லா ஆண்களுக்கும் Plain Color ஜட்டிகள் அழகான தோற்றத்தை கொடுக்கும்.
உங்கள் ஜட்டியின் Waistband ஆனது Bright Color ல் இருப்பது தான் நல்லது. அப்போது தான் உங்கள் சட்டை விலகும் போது அதே லேசாக ஜீன்ஸ்/பேண்டுக்கு வெளியே எட்டிப் பார்க்கையில் அனைவரது கவனமும் உங்கள் இடுப்பை நோக்கி இருக்கும். அது உங்கள் கவர்சியை அதிகரிப்பதில் செல்வாக்குச் செலுத்தும்.
பொதுவாக எல்லா ஆண்களுக்கும் Dark Colors ஜட்டிகள் அழகாக இருக்கும். ஆனால் சற்று கருமையான ஆண்களுக்கு, Bright Color ஜட்டிகள் அவர்களின் கவர்ச்சியை பாழாக்குவதாக இருக்கும். உங்கள் ஆடையை அவுத்துப் பார்த்தால் தானே அது தெரியும், யாரு வந்து அதை அவுத்துப் பார்க்க போறாங்க? என்று நீங்கள் கேட்கலாம். உண்மை தான், ஆனால் நமது தேர்வுகளை சரியாக மேற்கொண்டால், தேவை ஏற்படும் போது தைரியமாக தன்னம்பிக்கையுடன் டிரெஸ்ஸை அவுத்துப் போட்டு ஜட்டியுடன் நிற்கலாம், இல்லையா?
Comments
Post a Comment