லுங்கி, சாரம், கைலி என்பது வேறும் ஆடையல்ல. அது ஆண்களின் All in All Item ஆகும். லுங்கியை ஆண்கள் ஆடையாக மாத்திரம் அல்ல, பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் பயன்படுத்தலாம்.
ஆண்கள் ஆடை மாற்றுவதற்கு மறைவாக லுங்கியை பயன்படுத்தலாம். லுங்கியைப் பயன்படுத்தி ஆண்களால் நடுரோட்டில் நின்று கூட ஜட்டி முதற் கொண்டு அனைத்து ஆடைகளையும் அணிய முடியும்.
குளிருக்கு போர்வையாக ஆண்கள் லுங்கியை பயன்படுத்தலாம். பொருட்களை மூட்டையாக கட்டுவதற்கும் ஆண்கள் லுங்கியை பயன்படுத்தலாம். பொது இடங்களில் குளிப்பதற்கும் லுங்கியை ஆண்கள் பயன்படுத்தலாம்.
இதன் காரணமாக ஆண்கள் வெளியூர்/வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் போது பயணப்பையில்(Traveling Bag/Suitcase) லுங்கி, சாரம், கைலியை எடுத்துச் செல்வதன் மூலம் இரவு நேர ஆடைகளுக்கென தனியாக வேறு ஆடைகளை அதிகம் எடுத்துச் செல்ல வேண்டிய தேவை ஏற்படாது.
Keywords: பயணம் போகும் போது ஆண்கள் ஏன் அவசியம் லுங்கியை எடுத்து வைக்க வேண்டும்? பயணம் போகும் போது ஆண்கள் லுங்கியை எடுத்து வைக்க மறக்கக் கூடாது. வெளியூர் பயணம் போகும் போது ஆண்களுக்கு பல வகையில் உதவும் லுங்கி









Comments
Post a Comment