என்னதான் வெளியில அப்பிராணி போல காட்டிக் கொண்டாலும், சிலர் பார்வைகளையும், சிலரோட சைகைகளையும், பாலியல் ரீதியான சமிக்ஞைகளையும் இலகுவாக எல்லோராலும் புரிந்து கொள்ள முடியும்.
வாழைபழத்தோட தோலை உரித்து நண்பனுக்கு நீட்டினால், அதை அவன் சாப்பிட்டால் என்ன அர்த்தம்? லாலிபாப்(Lollipop/சூப்புத்தடி), ஐஸ் பழத்தை(Popsicle/Ice Pops) நண்பனுடன் பகிர்ந்து உண்டால் என்ன அர்த்தம்?
சிலர் வேண்டுமென்றே தம் மீது ஈர்ப்பு உள்ள நபர்களை உசுப்பேத்தி, அவர்களுக்கு பாலியல் ரீதியான தொடர்பை ஏற்படுத்தும் ஆசையை தூண்டி விட்டு, அப்படியே கை விட்டுட்டு அடுத்த வேலையைப் பார்க்கச் சென்று விடுவார்கள். இது மிகவும் தவறான செயலாம்.
பந்தில உட்கார வைச்சு, வாழையிலையப் போட்டால், அவசியம் பாயாசம் ஊத்தி நக்க வைத்துட்டுத் தான் பந்தில இருந்து எழுப்பனும்.
சிலர் சந்திக்கும் ஏமாற்றங்கள் மிகப்பெரிய காயங்களை மனதில் ஏற்படுத்தி விடும். நண்பனாக இருந்து, அவன் உங்களிடம் மாத்திரம் Open Up ஆகி, தனது உண்மையான ஆசைகள்/உணர்வுகளை உங்களிடம் வெளிப்படுத்தினால், அதில் உங்களுக்கு ஈடுபாடு இல்லாவிட்டாலும், அதனை தூண்டும் வகையில் நீங்களும் செயற்படுவது நல்லதல்ல. காதல் தோல்வி என்பது ஆணுக்கும் பெண்ணுக்கு இடையில் மாத்திரம் அல்ல. ஆணுக்கும் ஆணுக்கும் இடையிலும், பெண்ணுக்கும் பெண்ணுக்கும் இடையிலும் கூட ஏற்படலாம்.





Comments
Post a Comment