மோட்டார் சைக்கிள் ஓட்டும் ஆண்கள் Helmet அணிவது அவசியமாகும். தலைக்கவம்(Helmet) உயிர்க்கவசமாகும். ஆனால் தலைக்கு எண்ணெய் வைக்கும் ஆண்கள், பொடுகுத் தொல்லை இருக்கும் ஆண்களுக்கு Helmet அணிவது மிகுந்த பிரச்சனைக்குரிய விடையமாகும்.
சில ஆண்களுக்கு Helmet அணிவதால், சூட்டுக்கு தலை முடி கூட கொட்டுவது உண்டு. ஒரு சிலர் பார்த்து பார்த்து தலைமுடியை சீவி, சிகையலங்காரம் செய்து கொண்ட பின்னர், Helmet அணிந்ததும் அவை அணைத்து கலைந்து விடும். சிலருக்கு Helmet அணிந்திருக்கும் போது தலை முடிப் பகுதியில் அதிகம் வியர்த்து ஓடும்.
இவற்றையெல்லம் சரி செய்ய, தலைக்கவசம்(Helmet) அணிய முன்னர் தலைக்கு Skull Caps எனப்படும் Head Coverings(மேலுறை) அணிவர். அது வியர்வையை உறிஞ்சிக் கொள்ளும். அதே நேரம் ஹெல்மெட் அணிந்திருக்கும் போது தலைமுடியை சற்று உலர்வாக, அளவான சூட்டுடன் வைத்திருக்கும். வெயிலுக்கு Helmet சூடாவதால், அது நேரடியாக Helmet உள்ளே பரவுவதை வெகுவாக குறைக்கும்.
Full Face(முகம்) and Neck (கழுத்து) Protection யை Balaclavas தலையுறை(தலை உறை) யை பயன்படுத்தி பெற்றுக் கொள்ளலாம். இது குளிர்காலத்திற்கு மிகவும் ஏற்றது. இதனை அணிந்தால் கொள்ளையர்கள் போல கண்கள் மாத்திரமே தெரியும். ஏனையவை முழுமையாக மூடப்பட்டிருக்கும்.
நீண்ட கூந்தல் உடைவர்களுக்கு Silk or Satin Hair Wraps/Scarves/Scarfs தலையுறை அணிவதன் மூலம் தலை முடி ஹெல்மெட்டுடன் உராய்வதை கட்டுப்படுத்துவதுடன், தலை முடி சிக்காகுவதை குறைக்கும்.
Bandanas வகை தலை உறையானது Skull Caps போன்றது, ஆனால் பாரம் குறைவானது. வெயில் காலத்திற்கு ஏற்றது.
Neck Gaiters யை தலை உறையாக கருத முடியாவிட்டாலும் காதளவில் இருந்து கழுத்து வரை முகமூடி/Mask போல மறைக்க உதவும். அதிக தூசிகள் கிளம்பும்/மணல் புயல் ஏற்படும் இடங்களுக்கு பொருத்தமானது.
Keywords: Head coverings for helmets include skull caps for absorbing sweat and providing warmth, balaclavas for full-face and neck protection in cold weather, and silk or satin hair wraps to protect hair from friction and tangles. The best choice depends on the activity and weather conditions, as these head coverings improve comfort, hygiene, and can be designed for different needs like moisture-wicking or extra warmth.





Comments
Post a Comment