வயசுப் பசங்க மழைக்கு குடை பிடித்தால் ஏற்றுக் கொள்ளும் இந்த சமூகம், வெயிலுக்கு குடை பிடித்தால் ஏதோ சீக்கு(நோய்) வந்தவனாக்கும் என்று மனசு நோகும் படி பேச ஆரம்பித்து விடும். அந்தளவுக்கு வயதுக்கு வந்த ஆண்கள் வெயிலுக்கு குடை பிடிப்பது தவறான ஒரு விடையமாக இந்த சமூகம் கருதுகிறது.
ஒரு ஆண் பெண் துணையுடன் வெயிலில் செல்லும் போது வேண்டும் என்றால் குடை பிடிக்கலாம். ஆனால் ஒரு ஆண் எவ்வளவு உச்சி வெயிலில் வெளியே செல்வதாக இருந்தாலும் குடை பிடிக்க முடியாது.
ஆண்கள் வெயிலில் வியர்க்க வேலை செய்யும் போது தான், உடல் பருமன் குறைந்து, அவர்களின் ஆண்மை வெளிப்படும் என நினைக்கிறார்கள். ஆண்கள் வெள்ளையாக, பிரிஜ்ஜில் வைத்த ஆப்பிள்கள் போல இருப்பதில் எந்த பிரயோசனும் இல்லை என்பதை நம்பும் இந்த சமூகம், ஒரு ஆணிடம் இருக்கும் ஆண்மையை அவன் வெயிலில் நொந்து நுடில்ஸாகி, கருவாடாக காயும் போதே ரசிக்கிறது.
கடுமையான வெயிலுக்கும் கூட ஆண்களால் குடை பிடிக்க முடியாவிட்டாலும், அவர்கள் விரும்பினால் தொப்பி அணியலாம். கண்களுக்கு குளிர்ச்சியாக Cooling Glasses/Spectacles/Sun Glasses அணியலாம். வெயிலில் காய்ந்து முகம் கறுப்பாகாமல் இருக்க Sunscreen கூட பயன்படுத்தலாம். ஆனால் குடை பிடிக்க முடியாது.
ஆண்கள் வெயிலுக்கு குடை பிடிக்காமல் இருப்பதற்கு வேறு காரணங்களும் உண்டு. உதாரணமாக: சைக்கிள் ஓட்டும் போதும், மோட்டார் சைக்கிள்/பை ஓட்டும் போதும் ஒரு கையால் குடை பிடித்திருப்பது ஆபத்தான விடையமாகும். ஆகவே வண்டி ஓட்டும் ஆண்கள் மழைக்காலங்களில் குடை பிடிப்பதை விட Raincoat அணிவது நல்லது.
தற்காலத்தில் Raincoat ஆனது Coat/Hoodie, Pant போன்று ஆடை அமைப்பில் கூட விற்பனைக்கு உள்ளது. அவற்றை வண்டி ஓட்டுபவர்கள் இலகுவாக, அணிந்திருக்கும் ஆடைகளின் மேல் அணிந்து மழையில் நனையாமல் வண்டி ஓட்டக் கூடியதாக இருக்கும்.
குறிப்பு: ஆண்கள் சிறிய குடைகளை அன்றாடம் பயன்படுத்துவதை விட பெரிய குடைகளை பயன்படுத்துவது அவர்களுக்கு கவர்ச்சியாகவும் உதவியாகவும் இருக்கும்.
உங்களுக்கு வெயிலுக்கு குடை பிடிக்கும் பழக்கம் உள்ளதா? உங்க ஊர்ல ஆண்கள் வெயிலுக்கு குடை பிடித்தால் எப்படி பார்ப்பார்கள்?









Comments
Post a Comment