ஆண்கள் இடுப்பில் கட்டிக் குளிக்கும் துண்டை குற்றால துண்டு, குத்தாலம் துண்டு, குற்றாலம் துண்டு, ஈரெளைத்துண்டு, குற்றாலம் மடி துண்டு, காசி துண்டு, ஈரிழை துண்டு, சமயக்காரத் துண்டு, குற்றாலத்துண்டு, ஓறிலைத்துண்டு, பவானி துண்டு, சிவப்பு துண்டு, மலையாள துண்டு, சீசன் துண்டு என பல பெயர்களில் அழைப்பர்.
இந்த வகை துண்டுகள் குற்றால அருவியில் குளிக்கும் ஆண்கள் அதிகம் பயன்படுத்துவதால், இதனை பலர் குற்றால துண்டாகவே அறிகின்றனர். இதனை ஆண்கள் கோவணம் கட்ட பயன்படுத்தவும் முடியும்.
இதனை ஆண்கள் மாத்திரமல்ல குழந்தைகளை குளிப்பாட்டி, உடலை துடைக்கவும், தலைக்கு குளித்த பெண்கள் தலைமுடியில் உள்ள ஈரத்தை உலர்த்தவும் இது மிகவும் உதவியாக இருக்கும். இந்த வகை துண்டுகள் மிகவும் மிருதுவாக இருக்கும். அதே நேரம் ஈரத்தை சீக்கிரம் இழுத்துக்(Absorb) கொள்ளும்.
சில சமூகத்தினரிடம் இந்த துண்டில் தேங்காயை மூட்டை கட்டி மணப்பெண்ணின் இடுப்பில், அல்லது மணமகனின் தோளில் போடுவர். அகமுடையர் திருமணங்களில் புடவை சிறிதாக இருந்தால் இந்த துண்டில் தேங்காய் கட்டி மடியில் கட்டுவார்கள் அல்லது மாப்பிள்ளை தோள் மீது இருக்கும் வகையில் வைப்பார்கள். அதனால் திருமணத்தன்று அணிவிக்கப்படும் துண்டு என்பதால் சிலர் திருமணத்துண்டு, முகூர்த்தத்துண்டு எனவும் இதனை அழைப்பது உண்டு.
நீரோட்டம் அதிகம் உள்ள இடங்களில், அல்லது அருவி போன்ற இடங்களில் துண்டு கட்டிக் கொண்டு குளிப்பதை விட, ஆண்கள் ஜட்டியுடன் குளிப்பதன் மூலமே துண்டு அவிழ்ந்து விடுமோ என்ற பயமில்லாமல் குளிக்க முடியும்.
Keywords: Kutralam Thundhu, Oru ilai Thundu, Eeralai Thundu, Kovanam, Kutraalam Towels, Courtallam Falls, Courtalam Kutralam Kuttalam, Turkish Bath Towel, Pareo, Wedding Gift Towel, Sarong, Organic Cotton Towel, Fuchsia Towel, Striped Design Towel, 36x70 Bath Towel, Bldn-Tgc









Comments
Post a Comment