ஆண்கள் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி(Exercise/Work Out) செய்யும் போது எவ்வாறான ஜட்டியை அணிந்திருப்பது அவசியம் என்பது அவர்கள் செய்யும் உடற்பயிற்சி சார்ந்து மாறுபடும்.
ஒரு ஆண் பாரம் தூக்கும்(Weight Lifting) உடற்பயிற்சிகளை அதிகம் செய்வதாக இருந்தால், அவன் அவசியம் அவனது அடிவயிற்றுக்கும் Support கொடுக்கும் வகையில் Supporter ஜட்டியை(உதாரணமாக:Jockstrap) அல்லது Gym Belt யை அணிந்திருக்க வேண்டும். அதன் மூலம் அடிவயிற்றில் அதிக அழுத்தம் ஏற்பட்டு குடலிறக்க நோய்(Hernia) ஏற்படுவது தவிர்க்கப்படும்.
பாரம் தூக்குவது தவிர்ந்த, அடிவயிற்றுக்கு அதிக அழுத்தம் கொடுக்காத ஏனைய உடற்பயிற்சிகளை ஆண்கள் செய்யும் போது Thongs, Briefs, Trunks வகை ஜட்டிகளை தெரிவு செய்து அணியலாம்.
ஆண்கள் ஓடி, ஆடி உடற்பயிற்சி செய்யும் போது அவர்களின் ஆண்குறியையும், விதைகளையும் சுதந்திரமாக அசைய விடாமல், ஓரிடத்தில் நிலையாக வைத்திருக்கும் இவ்வாறான ஜட்டிகளை ஆண்கள் அணிவதன் மூலம் அசெளகரியமாக உணர்வதை தவிர்க்கலாம். அதே நேரம் தொடை இடுக்குகளில், தொடையில், மற்றும் அந்தரங்கப் பகுதிகளில் Chafing(துணியுடன் தேய்வதன் மூலம் ஏற்படும் சிராய்வு, தேய்வு) ஏற்படுவதை தவிர்க்கலாம்.
ஆண்கள் உடற்பயிற்சி செய்யும் போது அணியும் ஜட்டி மாத்திரம் அல்ல, அவர்கள் அணியும் உடைகள் கூட moisture-wicking(வியர்வையை உறிஞ்சி வைத்திருக்காமல், வியர்வையை துணியில் உள்ள துவாரங்கள் மூலம் வெளியேற்றும்) Nylon or Polyester, Cotton Blend போன்ற செயற்கை நார்களால் உருவாக்கப்பட்டிருப்பது முக்கியமாகும்.
ஆண்கள் வியர்க்க விறுவிறுக்க உடற்பயிற்சி செய்ய 100% பருத்தியினால் ஆன உள்ளாடைகளை அணிவது பொருத்தமானதல்ல.
ஆண்கள் உடற்பயிற்சி செய்யும் போது நீளமான கால்களை உடைய Boxer Briefs ஜட்டியை அணிவதை விட Compression Shorts/Sports tights களை அணியலாம். அவற்றின் கால்கள் Boxer Briefs ஜட்டி போல உருளாது.











Comments
Post a Comment