ஆண்கள் ஜட்டியோடு வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆண்கள் ஜட்டியோடு வந்தால் பெண்கள் இருக்கும் இடத்தில் ஜட்டியோடு வருகிறாயே உனக்கு அறிவிருக்கா என்று அப்போதும் ஆண்கள்தான் சகஆண்களுக்கு புத்திமதி கூறிக் கொண்டிருப்பார்கள்.
பெண்களுக்கு இதில் எந்தப் பங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில் காலங்காலமாக பெண்ணிடம் ஆண்கள் முன் குனியாதே, ஆடைகளை கவனித்துக் கொள், உள்கச்சை வெளியில் தெரிகிறது பார். என்று சகபெண்களால் அறிவுறுத்தப்பட்டே வந்திருக்கிறார்கள்.
அதற்கொரு காரணம் இருந்தது, ஆண்கள் கயவர்கள், அவர்களிடம் இருந்து உன்னை நீ பாதுகாப்பது உன் பொறுப்பு, கடமை. எச்சரிக்கையாக இரு. வீட்டிற்குள் கூட அண்ணன், தம்பி, அப்பா என்று ஆண்கள் இருப்பார்கள், அதனால் நைட்டிக்கு பேன்ட் அணிந்து தூங்கு. தூக்கத்தில் ஆடைகள் மேலேறி தொடை தெரிந்துவிடக் கூடாது. உள்ளாடைகளை அகற்றாதே. அவ்வாறாக விதிகள் ஏராளம்.
இன்றும் கூட எல்லாமும் மாறிவிடவில்லை, இவை இருக்கவே செய்கின்றன. இது முதலில் ஆண்களுக்கு அளிக்க வேண்டிய மரியாதை என்று நம்பவைக்கப்பட்டு, பிறகு ஆண்கள் மீதான நம்பிக்கையின்மை என்று புரியவைக்கப்படுகிறது.
ஒரு பெண் இவற்றை தகர்க்கும் போது, என் உடல் என் உடை என்று அறைகூவும் போது, நிஜமாய் அவள் உங்களை நம்ப ஆரம்பிக்கிறாள் என்று பொருள். எத்தனையோ நம்பத்தகுந்த ஆண்கள் அவளைச் சுற்றி இருக்கிறார்கள் என்று பொருள்.
ஆனால் மீண்டும் மீண்டும் அவளிடம் ஆண்கள் நம்பத்தகுந்தவர்கள் அல்ல என்று சொல்லிக் கொண்டே இருக்கிறோம். அதொரு ஒப்புதல் வாக்குமூலம். பிற ஆண்களை குற்றம் சொல்வதாக நினைத்து தம்மைத்தாமே வெளிச்சப்படுத்துகிறார்கள். கொச்சைப் படுத்துகிறார்கள்.
போட்ட ஜட்டியோட வா! உன்னை கண் கலங்காம நான் வச்சு காப்பாத்துறேன்.
தத்துவம்: காயாத ஜட்டி போட்டவனும் காதலிச்ச பொண்ணுக்கே மெட்டி போட்டவனும் ஏண்டா போட்டோம்னு பீல் பன்னியே ஆகனும்
ஜட்டியோடு ஆண்கள் சென்றால் என்ன தவறு என்று கேட்கிறார்கள் அல்லவா! ஜட்டியோடு வந்தாலும் பெண்களால் பாலியல் அத்துமீறல் ஒன்றும் நடந்திடாது எனும் தைரியம் தான் அது. அதே தைரியம் தான் ஒரு பெண்ணிடமும் இருக்கிறது. உன்னால் எனக்கு எந்த ஆபத்தும் நேர்ந்து விடாது என்கிற தைரியம். அது நம்மைப் பெருமை கொள்ளச் செய்யவேண்டும். ஆனால் அதனை விமர்சித்துக் கொண்டிருக்கிறோம்.
ஆம்பிளை ஜட்டி போட்டு புகைப்படம் போட்டாலும், அம்மணமா போட்டாலும் அது அவன் விருப்பம்! இதெல்லாம் ஒரு ஒப்பீடா! ஆணாதிக்கம் ஊறிப்போன மண்டைகள்! ஏற்கனவே ஆண்கள் ஜட்டி லைன் தெரிவது போல் பேண்ட் அணிகிறார்கள்! சட்டையில்லாமல் திரிகிறார்கள்! கேட்டால் அது அவர்கள் உடல், அவர்கள் உரிமை!
இன்னும் எளிமையாகப் புரியவைக்க வேண்டும் என்றால் பேருந்து நிலைய பொதுக் கழிவறையில் ஒரு ஆண் ஜட்டியோடு நின்று விட முடியுமா! ஒன்றுமில்லை அங்கு ஆண்களுக்கு ஆண்கள் நிகழ்த்தும் பாலியல் அத்துமீறல்கள் அதிகம். ஆண் அஞ்சி அரண்டு விடுவான்.
பெண்களுக்கு ஒட்டு மொத்த உலகமே பேருந்து நிலைய ஆண்கள் பொதுக்கழிவறை மாதிரிதான் என்று கற்பிப்பதில் அசிங்கப்படத்தான் வேண்டும்.
மானம் என்பது ஆடையை வைத்து உடலை மறைப்பதில் தான் உள்ளதா?
போலந்தில் கடுமையான குளிர்காலங்களில் நான்கு லேயர்கள் போட்டாக வேண்டும். மூன்று மாதங்களே வெயில் அடிக்கும்..அந்நேரங்களில் எந்தளவு தம் உடலை சூரிய ஒளிக்கு Expose செய்ய முடியுமோ, அந்தளவு தான் உடை அணிவார்கள்.
யாரும் யாரையும் பார்த்து கமெண்ட் அடிப்பதோ, Judge செய்வதோ நினைத்துக் கூட பார்க்க மாட்டார்கள். அளவில் பெரிய பூட்ஸ், முட்டி வரை காலணிகள், கலர் அடித்த சிகையலங்காரம் என எப்படி உருவத்தை மாற்றிக் கொண்டாலும் யாருக்கும் யாரைப் பற்றியும் கருத்து சொல்லத் தேவையில்லை.
இதை விட முக்கியமான ஒன்றை சொல்கிறேன். குளிர்நாடு என்பதால் பெரிய Indoor நீச்சல் குளங்கள் அரங்கங்கள் வார்சா நகரில் உண்டு. அதிகமாக பெண்கள் வரக் கூடிய அந்நீச்சல் குளங்களில் பெண்கள் அணியும் பிகினி பற்றி எந்த ஆணுக்கும் பிரச்சினையில்லை.
Sauna க்களில் உடையே அணியக் கூடாது. ஆண்களும் பெண்களும் எவ்வித உடையும் அணியாமல் எதிரெதிரே Sauna க்களில் அமர்ந்திருப்பார்கள். Sauna முடித்தவுடன் Shower, Ice Bath எல்லாமே உடை இல்லாமல் தான். இந்த துப்பட்டா போடுங்கள் தோழி விவாதங்கள் எல்லாம் அங்கு இல்லை. நம் மக்களை நினைத்தால் கவலையாக இருக்கிறது.












Comments
Post a Comment