ஆண்களின் உடல் முழுவதும், அதிலும் குறிப்பாக அக்குள், அடிவயிறு, நெஞ்சு, கை மற்றும் கால்களில் காடு போல முடி வளர்ச்சி ஏற்படுவது தான் ஒரு ஆண்மையுள்ள ஆணின் அடையாளம். அவற்றை பூப்பு முடி(Pubic Hair/Pubes), உடலில் ஏற்படும் உரோம வளர்ச்சி(Body Hair, Chest Hair, Armpit Hair, Back Hair) என அடையாளப்படுத்துவர்.
ஆனால் ஆண்களின் உடலில் ஏற்படும் முடி வளர்ச்சியானது அவர்களை கவர்ச்சியாக வெளிக்காட்ட வேண்டும். இல்லாவிட்டால், அவற்றை நீக்க வேண்டும், அல்லது தம்மை கவர்ச்சியாக வெளிக்காட்டும் வகையில் செம்மையாக்க வேண்டும்.
சில ஆண்கள் தமது உடலில் உள்ள முடிகளை கஷ்டப்பட்டு Full Shave செய்வர், அதன் காரணமாக அங்காங்கே வெட்டுக் காயங்கள், சருமப் பிரச்சனைகள் கூட ஏற்படுவது உண்டு. அவ்வாறான பிரச்சனைகள் ஏற்படுவதை Waxing செய்து Body Hair யை நீக்குவதன் மூலம் தவிர்க்கலாம். ஆனால் அது வலி மிகுந்ததாக இருக்கும்.
Body Hair யை Waxing செய்து நீக்குவது முடியை அதன் வேரோடு பிடுங்கி நீக்குவதால் வலி மிகுந்ததாக இருக்கும். அவ்வாறு இருப்பதால் Hairy Removal Creams பயன்படுத்தியும் சிலர் Body Hair யை நீக்குவர். இவ்வாறு நீக்கும் போது முடிகள் இரசாயணங்கள் மூலம் கரைக்கப்படுகிறது. ஆனால் வேரோடு பிடுங்கப்படுவதில்லை. அவர்களின் உடலில் தற்காலிகமாக எந்தவொரு முடியும் இருக்காது. சருமமும் மிருதுவாக, குழந்தைகளின் உடல் போல இருக்கும்.
ஆனால் இங்கு இரசாயணங்கள் பயன்படுத்தபடுவதால் சிலருக்கும் Hairy Removal Creams யை பயன்படுத்தும் போது ஒவ்வாமைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதே நேரம். உடலில் அதிக பிரதேசங்களுக்கு பயன்படுத்த அதிக பணமும் செலவாகும்.
குறிப்பு: முடி இல்லாத உடலை நீண்ட காலத்திற்கு தக்கவைத்துக் கொள்ள ஏனைய முறைகளை விட Waxing, Hair Removal Creams உதவும்.
ஆண்கள் Body Hair யை எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் தேவையான அளவுக்கு நேர்த்தியாக செதுக்க, அல்லது நீக்க Trimmer பயன்படுத்துவதே சிறந்ததாகும். ஆனால் தாடி, மீசையை Trim செய்ய பயன்படுத்தும் Trimmer யை பயன்படுத்தி உடலில் உள்ள, மற்றும் அந்தரங்கப் பகுதிகளில் உள்ள முடிகளை நீக்குவதை தவிர்க்க வேண்டும்.
சிலர் உடல் முழுவதும் Trimmer யைப் பயன்படுத்தி Body Hair யை அளவாக Trim செய்து விட்டு அக்குள் முடியையும், சுன்னி முடியையும் Razor யைப் பயன்படுத்தி Full Shave செய்வது உண்டு.
குறிப்பு: Hair Clippers யை தலைமுடி அளவுக்கு நீளமான முடிகளை அகற்ற பயன்படுத்தலாம்.
உங்களுக்கு விரும்பிய முறைகளில் உடலில் உள்ள முடிகளை நீங்கள் நீக்கலாம். ஆனால் முதுகுப் பகுதியில் உள்ள முடிகளை நீக்க Special Grooming Tools(Back Shaver) தேவைப்படும்.
விரும்பினால் உங்கள் நண்பர்களின் உதவியை அதற்கு பெற்றுக் கொண்டு, காசை மிச்சப்படுத்தலாம்.
குறிப்பு: ஆண்கள் தமது உடலில் உள்ள முடிகளை Full Shave செய்து நீக்கும் போது அவை வளரும் திசையிலேயே அவற்றை நீக்க வேண்டும். ஆகவே Hair Growing Patterns களை நன்கு அவதானித்து Full Shave செய்யவும்.





























Comments
Post a Comment