ஆண்கள் வேட்டி வாங்குவது எப்படி? வேட்டியின் நீளத்தை மீட்டரில் எப்படி தெரிந்து கொள்வது? நான்கு முழ வேட்டி என்றால் என்ன? அதன் அளவுகள் என்ன? எட்டு முழ வேட்டி என்றால் என்ன? அதன் அளவுகள் என்ன? நான்கு முழ வேட்டியை Single Veshti/Single Dhoti என்பர். எட்டு முழ வேட்டியை Double Veshti/Double Dhoti என்பர். இவற்றின் அளவுகளை எப்படி இந்தக் கால அளவு முறைகளில் தெரிந்து கொள்வது?
முழம் என்பது நீளத்தை அளக்கப் பண்டைத் தமிழர் பயன்படுத்திய ஓர் அலகு ஆகும். இது ஒரு மனிதனின் முழங்கையின் நீள அளவைக் குறிக்கும். பொதுவாக ஒரு முதிர்ந்த மனிதரின் முழங்கை அளவே ஒரு முழமாகக் கருதப்பட்டது. முழங்கை என்பது அம்மனிதரின் கைமுட்டியிலிருந்து நடுவிரலின் நுனி வரை உள்ள நீள அளவு ஆகும்.
ஒரு முழம் என்பது 0.47 meters ஆகும்.
The length of 1 Muzham is 0.47 meters.
நான்கு முழம் வேட்டியின் அளவுகள் மீட்டரில்,
உயரம்: 42 inches in Height
நீளம்: 1.86 meters long
கடையில் சென்று நான்கு முழம் வேட்டி வாங்கினால், அது சில வேளையில் 2 Meters நீளமாக இருக்கலாம். வேட்டி உற்பத்தியை இலகுவாக்குவதற்கு இவ்வாறு அவர்கள் நீளமாக வெட்டுவது உண்டு.
எட்டு முழம் வேட்டியின் அளவுகள் மீட்டரில்,
உயரம்: 42 inches in Height
நீளம்: 3.7 meters long
கடையில் சென்று எட்டு முழம் வேட்டி வாங்கினால், அது சில வேளையில் 4 Meters நீளமாக இருக்கலாம். வேட்டி உற்பத்தியை இலகுவாக்குவதற்கு இவ்வாறு அவர்கள் நீளமாக வெட்டுவது உண்டு.
கிட்டத்தட்ட இரண்டு முழம்(Muzham) என்பது ஒரு யார்(Yard) அல்லது மூன்று அடி(Feet), நான்கு சாண். இந்தப் புரிதலை வைத்து உங்களுக்கான வேட்டி அளவுகளை நீங்கள் மேற்கொள்ளலாம். ஆனால் வயதுக்கு வந்த ஆண்களுக்கு பொதுவாக எட்டு முழ வேட்டியே சிறந்தது.
Keywords: 4 Yards Veshti, 8 Yards Veshti



Comments
Post a Comment