இடது காலில் கறுப்பு கயிறு கட்டி கொள்வதால் தீய சக்திகள் நெருங்காது. கண் திருஷ்டி படாது. காலில் கருப்பு கயிறு காட்டுவதால் சனி, ராகு, கேது ஆகிய மூன்று கிரகங்களும் பலம் பெறும். சனீஸ்வர பகவானின் பார்வையின் வேகத்தை இந்த கறுப்பு கயிறு குறைக்கிறது. எதிர்மறை ஆற்றலின் தாக்குதல் குறையும்.
ஆனால் அவ்வாறு கணுக்காலில் கட்டும் கறுப்பு கயிறில் முடிச்சுகள் போட்டிருக்க வேண்டியது அவசியம், இதனை பிரம்ம முகூர்த்தத்தில் அல்லது நண்பகல் 12 மணிக்கு கட்டலாம். இதனை சனிக்கிழமையில் கட்டிகொள்வது சிறப்பு.
நீண்ட கால தீராத நோய் இருந்தால், தோல் பிரச்னை இருந்தால், உடல் நல கோளாறுகள் இருந்தால், கறுப்பு கயிறை சனிக்கிழமை கட்டிக்கொள்ளலாம்.
ஆண், பெண் இருவருமே அணியலாம். ஆண்கள் வலது காலிலும், பெண்கள் இடது காலிலும் அணியவேண்டும். முக்கியமாக இளம்பெண்கள் அணிவது மிகச் சிறப்பு.
அழகுக்காக மணிக்கட்டிலும், கணுக்காலிலும் கயிறு கட்டுபவர்கள் எந்தக் கையில், எந்தக் காலிலும் இவற்றை அணியலாம்.


Comments
Post a Comment