மூட்டிய லுங்கியை, அதாவது சாரம்/கைலியை ஆண்கள் கால் வழியாகவோ அல்லது தலை வழியாகவோ அணிந்து கொண்டு அதனை இடுப்பில் கட்டாமல் தோள் மூட்டில் தங்க வைத்துக் கொண்டு, லுங்கியின் ஒரு முனையை வாயில் பிடித்து பற்களால் கடித்துக் கொள்ளும் போது, அவர்களைச் சுற்றி உருவாகும் லுங்கியால் ஆன மறைவில் ஆண்களால் ஜட்டி, பேண்டை அணிய மாத்திரம் அல்ல, ஏற்கனவே அணிந்திருக்கும் ஜட்டி, பேண்டைக் கூட கழட்டி, முழு நிர்வாணம் ஆகாமல் ஆடை மாற்ற முடியும்.
ஆண்கள் லுங்கியை அவர்களின் தோள்களில் போர்வை போல போர்த்தி, பற்களால் பிடித்துக் கொள்ளும் போது, ஆடை மாற்றும் போது ஏற்படும் உடல் அசைவுகளுக்கு, லுங்கியானது இடுப்புக்கு கீழே இறங்காது.
சில ஆண்கள் லுங்கியை போர்வை போல போர்த்தி, தோள்களில் மாத்திரம் தங்க வைப்பர். அவ்வாறு செய்தால், ஆண்கள் ஜட்டி, பேண்ட் அணிய லேசாக குனிந்தால் கூட இடுப்புக்குக் கீழே இருப்பதை எதிரில் இருப்பவரால் ஓரளவுக்காவது(Glimpse) பார்க்கக் கூடியதாக இருக்கும்.
சில ஆண்கள் லுங்கியை இடுப்பில் கட்டி, அதனை முழங்கல்களுக்கு மேல் மடித்துக் கட்டிய பின்னர், ஜட்டியை தொடை வரை அணிந்த பிறகு, லுங்கியை அவிழ்த்து மேலே குறிப்பிட்டது போல உடலை மறைத்துக் கொண்டு ஜட்டியை ஒழுங்காக அணிவர்.
சில ஆண்கள் லுங்கியை இடுப்பில் கட்டி, அதனை முழங்கல்களுக்கு மேல் மடித்துக் கட்டிய பின்னர், லுங்கிக்குள்ளே கைகளை விட்டு, பேண்டை அவிழ்த்து, ஜட்டியையும் பேண்டையும் ஒரே நேரத்தில் கழட்டுவர். அது சற்று போராட்டம் மிகுந்ததாக இருக்கும்.
குறிப்பு: மூட்டிய லுங்கி என்பது வேட்டி போல இருக்கும் லுங்கியின் இரு முனைகளையும் இணைத்து, அடித்து ஒரு துணியால் ஆன Tube போன்று உருவாக்குவதை குறிக்கும். ஆண்கள் லுங்கியை Mobile Room போல பாவித்து பொது இடங்களில் வைத்துக் கூட நிர்வாணமாகாமல் ஆடை மாற்றலாம்.
Comments
Post a Comment