வயதுக்கு வந்த ஆண்களைப் பொறுத்தவரையில் ஆடை மாற்றும் போது நிர்வாணமாக நிற்க வேண்டிய சூழ் நிலை ஏற்படுவது இயல்பான ஒன்றாகும். முன் பின் பழக்கம் இல்லாத பல ஆண்கள், அல்லது நண்பர்கள் முன்னிலையில் என்றால் கூட அவர்கள் நிர்வாணமாக நிற்க தயங்குவதில்லை.
ஆண்களைப் பொறுத்தவரையில் ஆடை மாற்றும் போது நிர்வாணமாக நிற்பது சாதாரணமான விடையம் ஆகும். ஆனால் ஆண்கள் நிர்வாணமாக நிற்பது எப்போது கேள்விக்குறியாகும் என்றால், அவன் நிர்வாணமாக நிற்கும் போது அவனது ஆண்குறி விறைப்படைந்திருக்கும் போது மட்டுமாகும்.
எதற்கு வீண் வம்பு என்று, அப்புறம் கண்டவனும் நம்ம கண்மணியை கண்ணு வைத்து விட்டால் என்று யோசித்து அநேகமான ஆண்கள் ஆடை மாற்றும் போது தம்மைச் சூழ ஒரு தற்காலிக மறைவை, குறைந்தது அந்தரங்கப் பகுதியை மறைக்கும் வகையிலாவது உருவாக்குவது உண்டு.
அதற்கு மூட்டிய லுங்கி/சாரம் மிகவும் உகந்ததாகும். ஆனால் ஆண்கள் விரும்பினால் துண்டு/டவல், வேட்டி, மூட்டாத லுங்கி/கைலி கூட பயன்படுத்தி முழு நிர்வாணமாகாமல் அவற்றின் மறைவில் ஆடை மாற்றலாம்.
Read More: லுங்கியை வாயில் கவ்விக் கொண்டு ஆண்டை உடை மாற்றுவது எப்படி?
முனைகள் இணைக்கப்பட்டு மூட்டிய லுங்கி(Lungi Stitched like Tube) ஆண்களைச் சூழ மறைவை ஏற்படுத்தும்,
ஆனால் மூட்டாத லுங்கி, வேட்டி, டவல் போன்றவை முழுமையான மறைவை ஏற்படுத்தாது. அதன் காரணமாகவே மூட்டாத லுங்கி, வேட்டி, டவல் அணிந்து ஆடை மாற்றும் போது யாரும் இல்லாத பக்கம் திரும்பி நின்று ஆடை மாற்றுவர்.
Comments
Post a Comment