நீங்கள் எந்த உறவில் இருந்தாலும் பணம் விஷயத்தில் மட்டும் சரியா இருந்தால் அந்த உறவு நிலைத்து நிற்கும். பெரும்பாலான மகிழ்வன்கள்(Gay/Bisexual) தங்களிடம் இருக்கும் பணத்தை தாம் காதலிக்கும் நபர்களிடம் இழந்து விடுகிறார்கள். பழக ஆரம்பித்த பத்து நாட்களிலேயே அவர்களிடம் தன்னை, தன் கற்பை இழப்பது மட்டுமல்லாமல் தன் பணத்தையும் இழப்பது மிகவும் கொடுமையான விஷயம். சில ஏமாற்று பேர்வழிகள், மோசடிக்காரர்கள் ஓரினச்சேர்க்கையாளர்களை, அதிலும் குறிப்பாக Closet Gays(தன்னை பொதுவெளியில் தன்னினச்சேர்க்கையாளராக அறிமுகம் செய்ய பயப்படுபவர்கள்) களை குறிவைத்து காதல் வலைகளை வீசி பணம் கறப்பது உண்டு. அவர்களிடம் இழந்த பணத்தை கேட்டால், உன்னைப்பற்றி வெளியில் சொல்வதாக பயமுறுத்துவார்கள். நம்மில் பலர் ஓரின உறவுகளை ஆரம்பிக்கும் போது, நேசிக்க ஆரம்பித்து கொஞ்ச நாட்களில் அவனை நம்முடைய கணவன் போல நினைத்து, அவனுக்கு பேண்ட், சட்டை, பெர்ஃப்யூம், கண்ணாடி, பைக், செயின் அவ்வளவு ஏன் ஜட்டி கூட வாங்கி கொடுக்கிறோம். ஆனால் அவன் நமக்கு வாங்கி கொடுப்பது ஒன்றே ஒன்றுதான் "நம்பிக்கை துரோகமும், ஏமாற்றமும்". சில அண்கள் Bottom ஆண்களை காசு கறக்கும...
a tamil blog that helps you discover expert insights and compassionate advice on men's sexual health, intimate issues, and private concerns. This blog offers a safe space to explore topics such as erectile dysfunction, libido, premature ejaculation, hormonal balance, and other sensitive health problems. Learn about effective treatments, lifestyle tips, and open discussions to improve your well-being and confidence.