Skip to main content

Posts

Showing posts with the label Parenting

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


வயதுக்கு வந்த ஆண்களுக்கு தந்தை செய்ய வேண்டிய கடமைகள்

பெண்கள் வயதுக்கு வரும் போது காட்டும் அக்கறையை அவர்களின் குடும்பத்தார் ஆண்கள் வயதுக்கு வரும் போது பெரிதாக காட்டுவதில்லை. பசங்கன்னா பூப்படைதல் பற்றிய அறிவை இந்த சமூகத்திடம் இருந்தே கற்றுக் கொள்வார்கள் என்ற நிலைப்பாட்டிலேயே பலர் இருக்கிறார்கள். இதன் காரணமாகவே பல ஆண்கள் சிறுவயதில் தவறான பாதைகளுக்கு சென்று தமது வாழ்க்கையை தொலைக்கிறார்கள். குறைந்தது 13 - 14 வயது வரையாவது, ஆண் குழந்தைகளை தந்தை தன்னுடன் குளிப்பாட்ட வேண்டும். அப்போது தான் பூப்படையும் போது உடலில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பில் தெளிவான புரிதலை பசங்களுக்கு ஏற்படுத்த முடியும். வாரம் ஒருமுறையாவது எண்ணெய் தேய்த்து குளிப்பாட்ட வேண்டும். அவ்வாறு குளிப்பாட்டும் போது பூப்படையும் போது உடலில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பாக ஒரு அறிமுகத்தை தந்தை கொடுக்க வேண்டும். 10 வயதை தாண்டிய பசங்களை லுங்கி, வேட்டி கட்ட பழக்க வேண்டும். அவர்கள் அதனை முறையாக கட்ட பழகும் வரை அவர்களை தனி அறையில், கதவை சாத்தி விட்டு படுக்க அனுமதிக்க வேண்டும். லுங்கி, வேட்டி கட்ட ஆரம்பித்த காலத்தில் இரவு தூங்கும் போது ஆண்களின் இடுப்பில் இருந்து லுங்கி, வேட்டி கழறலாம்.