ஆண்கள் வேட்டி, அல்லது லுங்கி கட்ட முன்னர் சட்டையை அணியலாமா? வேண்டாமா? என்பது ஒருவரது தனிப்பட்ட விருப்பு வெறுப்பு சார்ந்தது. ஆனால் இடுப்பில் வேட்டி, லுங்கி கட்ட முன்னர் சட்டையை அணிந்தால், அவசியம் வேட்டியை/லுங்கியை கட்ட சட்டை ஒரு தடையாக இருக்கும்.
இதன காரணமாகவே ஏற்கனவே சட்டை அணிந்த ஆண்கள் லுங்கி, வேட்டி கட்டும் போது சட்டையை தூக்கிப் பிடித்துக் கொண்டு வேட்டியை அல்லது லுங்கியை கட்டுவர்.
ஆண்கள் விரும்பினால் பனியனை உள்ளே விட்டும் அல்லது வெளியே விட்டும் கூட வேட்டி, லுங்கியை அணியலாம். ஆனால் சட்டையை உள்ளே விட்டு அதன் மேல் வேட்டியை, அல்லது லுங்கியை அணிவது அழகல்ல.
ஆனால் லுங்கியை அல்லது வேட்டியை முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டும் போது விரும்பினால் அந்த மடிப்புக்குள் சட்டை இருக்கும் வகையில் லுங்கியை அல்லது வேட்டியை தூக்கி முழங்கால்களுக்கு மேல் மடித்து கட்டலாம்.
Comments
Post a Comment