பொதுவாகவே மாரி செல்வராஜ் இயக்கும் திரைப்படங்களை எடுத்துக் கொண்டால் அவை சார்ந்து ஆண்ட சாதியினருக்கும் அடக்கி ஒடுக்கப்பட்ட சாதியினருக்கும் வெவ்வேறான கருத்துக்கள், முரண்பாடுகள் இருக்கும்.
பெரியேறும் பெருமாள், கர்ணன் வரிசையில் திரைக்கு வர இருக்கும் மாரி செல்வராஜின் இன்னொரு படம் தான் Bison(காட்டெருமை). அந்தப் படத்தின் First Look, Trailers, மற்றும் பாடல்கள் தற்சமயம் இணையத்தளங்களில் வெளியாகி வருகின்றன. இப்போ அதில ஏதாவது பிரச்சனை கிளம்பியிருக்கா என்றால் அது தான் இல்லை. பைசன் படம் வெளியாவதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால் பைசன் திரைப்படத்தில் துருவ் விக்கிரம் அணிந்திருந்த லுங்கி தான் தற்சமயம் பேசுபொருளாகி உள்ளது.
துருவ் என செல்லமாக அழைக்கப்படும் Dhruv Vikram அவர்கள் Bison(2025) திரைப்படம் சார்ந்த நேர்காணலில் கர்ணன் படத்தில் நடிகர் தனுஷ் அணிந்த அதே லுங்கியை பைசன் படத்தில் சில காட்சிகளின் போது தானும் அணிந்ததாக கூறியிருந்தார். தனுஷ் அணிந்த லுங்கியை துருவ் அணிந்தது தான் பிரச்சனையா? அதுவும் இல்லை. ஒரே லுங்கி என்பது போல் தான் அவர் சொல்லியிருப்பார். அதே லுங்கி என்று சொல்லியிருக்க மாட்டார்.
உங்களுக்குத் தெரியுமா? ஒரு ஆண் அணிந்த லுங்கியை அவன் சம்மதத்துடன் இன்னொரு ஆண் அணியலாம். ஜட்டி அணிந்து லுங்கி கட்டும் போது அது ஒரு மேலாடை போன்றே அணியப்படும். அது அந்தரங்க உறுப்புகளுடன் உறவாடாது.
அப்போ, இப்போ என்ன தான் பிரச்சனை? கர்ணன் திரைப்படத்தில் தனுஷ் கட்டிய லுங்கியும், பைசன் திரைப்படத்தில் துருவ் விக்ரம் கட்டியிருக்கும் லுங்கியும் ஒரு குறிப்பிட்ட சாதியினர் அணியும் லுங்கி என சமூகவலைத்தளத்தில் ஒரு பதிவு உலாவருகிறது. அதனால் தான் இப்போது களம் சூடு பிடித்துள்ளது.
ஆனால், உண்மையில் தனுஷும், துருவும் அணிந்திருக்கும் லுங்கியானது எந்தவொரு குறிப்பிட்ட சாதியினரும் அணியும் லுங்கி அல்ல என்பது தான் உண்மை. அது ஒரு வகை பாலியஸ்டர் லுங்கி. நாம் அன்றாடம் அணியும் லுங்கியானது பருத்தி துணியில் நெசவு செய்யப்பட்டிருக்கும். ஆனால் இந்த லுங்கியானது பாலியஸ்டர் துணியில் செய்யப்பட்டிருக்கும்.
நமது நாட்டின் கால நிலைக்கு இவ்வாறான Pure Polyester Lungi களை அணிந்திருந்தால் இடுப்புக்குக் கீழே எல்லாம் அவிந்து விடும். அந்தளவுக்கு அனல் காற்று வீசும்.
இதற்கு வெளிநாட்டு லுங்கி(Imported Lungi) என்ற பெயரும் உள்ளது. 1985 - 1995 காலத்துல மலேசியா, சிங்கபூர்ன்னு வேலைக்கு போறவங்க வாங்கிட்டு வந்து நண்பர்களுக்கும், சொந்தக்காரங்களுக்கும் இனாமா கொடுப்பாங்க. அதுக்கப்புறம் நம்ம ஊர்ல காட்டன் லுங்கிகள் பரவலாக பயன்படுத்த துவங்கியதில் இருந்து இந்த வகை லுங்கியானது சந்தைக்கு வருவது அரிதாகி விட்டது.
காட்டன் லுங்கிகள் போல இதனை அணிய முடியாது. இடுப்புல நிக்காது. முடிச்சு போடணும், அல்லது பாலியெஸ்டர் லுங்கியை பெல்ட் அணிந்து அணிய வேண்டும். இந்த வகை லுங்கி அணியும் போது சாதாரண பெல்ட் அணியாமல் அந்த நாட்டாமை பெல்ட் போட்டுட்டு திரியனும்.
சிலர் அரைஞாண் கயிற்றை இதன் கட்டின் மேல் விட்டு கட்டுவர். மற்றபடி வயல் வேலை செய்றவங்களுக்கு இது பெஸ்ட். இலகுவாக துவைத்து அழுக்கை நீக்கலாம். நீரில் நனைத்தாலும் சீக்கிரம் காய்ந்து விடும். காட்டன் லுங்கிகள் போல சீக்கிரம் சுருங்காது. அயன் செய்ய வேண்டிய தேவை மிகக் குறைவு.
தனுஷ், துருவ் அணிந்திருக்கும் லுங்கி டிசைனானது பாலியஸ்டர் துணில லுங்கி அறிமுகமான போது வந்த டிசைன். அவ்ளோதான் இதோட வரலாறு. இதுக்கு ஜாதி சாயம் பூசுவது வன்மத்தின் உச்சம். ஜட்டில தாண்டா இன்னும் நீங்க சாதிய அரசியல் பண்ணல.
Read More: ஆண்கள் லுங்கி, சாரம் கட்டுவது எப்படி? லுங்கி கட்டுவது பற்றி தெரிந்திருக்க வேண்டிய விடையங்கள்.
Keywords: பாலியெஸ்டர் கைலிய கட்டி பழகிட்டா காட்டன் கைலி புடிக்காது, சிலோன் லுங்கி, காட்டன் செக்டு டிசைன் லுங்கி, மலேசியன் பாலிஸ்டர் லுங்கி, இது இடுப்புல நிக்காது அதுனால எனக்கு பிடிக்காது அண்ணான்கயறு போட்டு இருக்கனும்
Comments
Post a Comment