ஒரு மனிதருக்கு இயற்கையான தெரிவுகள் பல இருக்கலாம். சிலரை முதல் முறை பார்க்கும் போதே பிடிக்கும். ஒரு சிலரை பார்க்க பார்க்கத்தான் பிடிக்கும். அதே போல சிலரை பார்த்து, பழகினால் தான் பிடிக்கும். ஆனால் ஒருவர் மீது இன்னொருவருக்கு அவ்வளவு எளிதில் எந்தவொரு தனிப்பட்ட காரணமும் இல்லாமல் வெறுப்பு ஏற்படாது. ஆனால் ஒருவர் தன்னினச்சேர்க்கையாளராக(Gay, Bisexual) இருந்தால் அவர் மீது சிலருக்கு கண் மூடித்தனமாக வெறுப்பு ஏற்படும். அவ்வாறு வெறுப்பு ஏற்படுவதற்குக் காரணம் ஹோமோபோபியா ஆகும்.
ஹோமோபோபியா(Homophobia) என்பது ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிராக உள்ள பயம், வெறுப்பு அல்லது தப்பான எண்ணம் ஆகும். இது அவர்களுக்கு எதிரான பாகுபாடு மற்றும் வன்முறைக்கு வழிவகுக்கும். இதை "ஒருபாற்சேர்க்கை விரோதம்" அல்லது "தன்பாலினர் வெறுப்பு" என்றும் கூறலாம்.
ஹோமோபோபியா எண்ணம் உள்ள ஒரு நபரிடம் தன்னினச்சேர்க்கையில் ஆர்வமுள்ள நபர் தனியாக மாட்டிக் கொண்டால் அவரை சிதைத்து சின்னாபின்னமாக்கக் கூட தயங்கமாட்டார்.
அவரை சமூகத்தில் அடையாளம் காட்டி, அவமானப்படுத்தி, துஷ்பிரயோகத்திற்குக் கூட ஆளாக்குவர். அவரிடம் உள்ள சொத்துக்கள், விலையுயர்ந்த பொருட்கள் போன்றவற்றை கூட சூறையாடுவர். சில வேளைகளில் அவரிடம் இவருக்கு தன்னினச்சேர்க்கையில் ஈடுபாடு உள்ளது போல நடித்து, தனியாக அழைத்துச் சென்று அம்மணமாக்கி, வீடியோ எடுத்து Blackmail கூட செய்யலாம்.
அவதானம்: சிலர் கட்டி வைத்து, சித்திரவதை செய்து கொலை கூட செய்யலாம்.
சிலருக்கு ஹோமோபோபியா எண்ணம் இயற்கையாகவே தோன்றுமாம். ஆனால் அநேகமானவர்களுக்கு அவர்கள் சிறுவர்களாக இருக்கும் போது ஏற்பட்ட பாலியல் துஷ்பிரயோகங்களால் கூட ஹோமோபோபியா எண்ணம் ஏற்படுகிறதாம்.
சிறுவராக இருக்கும் போது ஒருவர் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகத்திற்கு உள்ளானால், அவர் ஒன்றில் சமூகத்திற்கு பயந்த சுபாவமுடையவராக மாறலாம், அல்லது சமூகத்தை பழிவாங்கும் சிந்தனையுடையவராக, கொடூரனாக கூட அவர் மாறலாம்.
தன்னை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்தவர் ஒரு ஆணாக இருக்கும் போது அவரை இவர் தன்னினச்சேர்க்கையாளர் என தவறாக அடையாளம் கண்டு, அவர்கள் மீது தவறான எண்ணத்தை உருவாக்கிக் கொள்ளலாம். ஆனால் தன்னினச்சேர்க்கையாளர்கள் வேறு, குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்யும் நபர்கள்(Pedophiles) வேறு என்பதை இவர்கள் எளிதில் புரிந்து கொள்ள மாட்டார்கள்.
Pedophiles என்பவர்கள் பூப்படையாத சிறார்கள் மீது பாலியல் ரீதியான ஆசையை, கவர்ச்சியை, எண்ணங்களை கொண்டவர்கள் ஆவர்.
உங்களுக்குத் தெரியுமா? Homophobia எண்ணம் கொண்டவர்கள் எல்லோரும் Straight ஆண்கள் கிடையாது.
Keywords: துஷ்பிரயோகத்திற்கு உள்ளானவர்களுக்கும் ஹோமோபோபியா தொற்றுக் கொள்ளும், சிறுவர் துஷ்பிரயோகம், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம், ஓரினச்சேர்க்கை, தன்னினச்சேர்க்கை, சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானவர்களுக்கும் ஹோமோபோபியா துளிர்விடலாம்
Comments
Post a Comment