ப்ளூடூத்திங்(Bluethoothing), ஹாட் ஸ்பாட்டிங்(Hotspotting) மற்றும் பிளஷ்ப்ளூடிங்(Flashblooding) இவையெல்லாம் ஏதோ ஒரு செல்போனைக் கொண்டு மற்றொரு செல்போனுக்கு டேட்டா அனுப்ப உபயோகப்படுத்தும் தொழில்நுட்பம் சார்ந்த சொற்கள் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.
தற்காலத்தில் மேற்கூறிய இரண்டு பதங்களும், உடலைப் பதம் பார்க்கும் வேறு காரணங்களுக்காக உபயோகப்பபடுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. கொக்கைன், ஹெராயின், மெத்தாமிடமின் போன்ற போதை வஸ்துக்களை உடலில் உள்ள ரத்த நாளங்கள் வழியாக செலுத்திக் கொள்வதும், இதற்காக பயன்படுத்திய ஊசியை பலரும் பகிர்ந்து கொள்வதும் இதுவரை கேள்விப்பட்ட ஒன்று. ஆனால் தற்போது ஃபிஜி, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், லெசோத்தோ, டான்சானியா என ஆங்காங்கே இந்த ப்ளூடூத்திங்/ஹாட் ஸ்பாட்டிங் மெதுமெதுவாக பிரபலமடைந்து வருகிறது.
இதில் என்ன செய்கிறார்கள்?
ஒரு நபர் மேற்கூறிய போதை வஸ்துவில் ஒன்றை தனது ரத்ததத்தில் நாளம் வழியாக ஏற்றிக் கொள்வார். சிறிது நேரம் கழித்து, அவரது ரத்தத்தில் சில மில்லிகளை சிரிஞ்சு மூலம் எடுத்து அதை மற்றொருவரோ, இன்னும் சிலரோ ஏற்றிக் கொள்வது தான் ப்ளூடூத்திங் எனப்படுகிறது. இதன் மூலம், அந்த ரத்தம் ஏற்றப்பட்ட உடன் போதை உண்டாவதாகக் கூறப்படுகிறது.
இது எத்தனை அபாயகரமான போக்கு தெரியுமா?
ரத்தம் வழியாக எளிதாகப் பரவும் ஹெச்.ஐ.வி ( எய்ட்ஸ் வைரஸ்), ஹெப்பாடைட்டிஸ் சி, பி ஆகியவை பரவுவதற்கு ஏதுவாக அமைந்துவிடும். ஃபிஜி நாட்டில் கடந்த பத்தாண்டுகளில் எய்ட்ஸ் தொற்று முன்னெப்போதும் இல்லாத அளவு அதிகரித்து வருவதற்கு
பாதுகாப்பற்ற உடலுறவுடன் சேர்த்து இந்த ப்ளூடூத்திங்குக்கும் பங்கு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
எதற்காக இவ்வாறு ரத்தத்தை பகர்கின்றனர்?
ஒருமுறை செலவழித்து போதை வஸ்துவை வாங்கி ஒரே நேரத்தில் இருவர் மூவர் போதை அடையமுடிகிறது. இதனால் பணம் மிச்சமாகிறது என்று கூறப்படுகிறது. கூடவே போதை வஸ்து கிராக்கி அதிகமாக இருக்கும் போதும், கெடுபிடி அதிகமாக இருக்கும் போதும் இளையோர் இப்படி தவறான வழிமுறைகளைக் கடைபிடிக்கின்றனர்.
பாகிஸ்தானில் சில பகுதிகளில் உபயோகப்படுத்தப்பட்டு கீழே போடப்பட்ட சிரிஞ்சுகள், போதை வஸ்து குப்பிகள் ஆகியவற்றை குறைவான விலையில் விற்பதாகவும் செய்திகள் வருகின்றன. ஃபிஜி, தென் ஆப்ரிக்கா, டான்சானியா என்றிருந்த பழக்கம் நமக்கும் அச்சுறுத்தலாக அமையும் வாய்ப்பு அதிகம். போதைப் பழக்கமே ஆபத்தானது அதிலும் ரத்த நாளம் வழி போதை வஸ்துகள் நுகர்வது அதிலும் ஆபத்து. இந்நிலையில் ரத்தத்தை மாற்றிக் கொள்ளும் இத்தகைய பழக்கங்கள், எய்ட்ஸ், ஹெப்படைட்டிஸ் பி, சி உள்ளிட்ட தொற்றுகளை அதிகரிக்கக் கூடும்.
இன்னும் பொருந்தாத ரத்த வகை உள்ள ஒருவரின் ரத்தத்தை மற்றவருக்கு ஏற்றும் போது உயிருக்கு உலைவைக்கக் கூடும்.
இது குறித்து அனைவரும் விழிப்புணர்வு பெற வேண்டும். இது வராது. இது பற்றி எனக்குத் தெரியாது. இது இங்கு நடக்காது என்று அலட்சியம் கொள்வதை விட எச்சரிக்கையும் வருமுன் தடுப்பது நல்லது.
இது போன்ற பல விதமான போதைப்பழக்கங்கள் நமது சமூகத்தில் வேரூன்ற ஆரம்பித்து விட்டன. ஆண்களை போதையின் பக்கம் இழுப்பதற்கும் வயது வித்தியாசம் பார்க்காமல் போதை மருந்துகள் கலந்த பாலியல் லேகியங்கள், மதன மோதக வில்லைகள் அதிகம் விற்பனை செய்யப்படுகின்றன. போதைப்பொருட்கள் பற்றி மேலும் பல தகவல்களை அறிய இங்கே அழுத்தவும்.
Keywords: இப்படியெல்லாம் குறைந்த செலவில் போதைப்பொருளை பயன்படுத்தலாமா? Drugs Use, Awareness Post


Comments
Post a Comment