சமூக வலைத்தளங்கள் நல்ல விடையங்களுக்காக மாத்திரமல்ல, தமது தீய எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ளவும் பயன்படுத்தப்படுகின்றன.
சின்ன மீனை போட்டு பெரிய மீனைப் பிடிப்பது என்று நமது சமூகத்தில் வியாபார உத்திகள் தொடர்பில் பலர் பேசுவதை அவதானித்திருப்பீர்கள். அது போல ஒன்று தான் இந்த Thirst Traps மற்றும் Honey Traps களாகும்.
இவை பொதுவாக Sexually Suggestive ஆக இருப்பினும், Thirst Traps ஆனது Honey Traps யை விட சிறந்தது எனலாம். Thirst Traps என்பது ஒருவர் சமூகவலைத்தளங்களில் பிரபலமாவதற்காகவோ அல்லது பலரை கவர்வதற்காகவோ ஆபாசமானது என்று கூற முடியாத அளவுக்கு கவர்ச்சியான Photos, Videos களை பகிர்ந்து தமது அழகையும், அம்சமான உடல் அமைப்புகளையும் மற்றவர்கள் ஆராதிப்பதையும், பாராட்டுவதையும் ரசிப்பது ஆகும்.
ஆனால் Honey Traps என்பது மேலே கூறப்பட்டது போன்ற சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிப்பதற்கான மிகச்சிறந்த உதாரணமாகும். இதிலும் Thirst Traps சம்பந்தப்பட்டாலும், அது உங்களை அவர்களின் DM/Inbox யை தட்டும் அளவுக்குச் செல்லும். வீடியோ காலில் நிர்வாணமாக பேசும் அளவுக்கு கூட செல்லும். அவர்களை தனிமையில் ரூம் போட்டு சந்திக்கும் அளவுக்குக் கூட செல்லும். இப்படி எல்லை கடந்து பழகும் போது அவை அணைத்தும் Video Record செய்யப்படலாம். அதே நேரம் அவர்கள் உங்களிடம் இருந்து பல தகவல்களை சேகரித்து, சில வேளைகளில் உங்களுக்குத் தெரியாமலேயே கூட உங்கள் Credit/Debit Cards களை பயன்படுத்தலாம், அல்லது உங்களை மிரட்டி ஆயுசுக்கும் பணம் கறக்கலாம்.
தவறான நோக்கத்திற்காக வேண்டுமென்றே உங்கள் பாலியல் ஆசைகளை தூண்டி, உங்கள் மனதை மாற்றி, உங்களுடைய Weakness யை தெரிந்து கொண்டு, அதை அடித்து(Exploit) உங்களை போட்டு பிழிந்தெடுப்பது தான் இந்த Honey Traps.
Thirst Traps அநேகமான தனி நபர்கள் சார்ந்ததாகும். ஆனால் Honey Traps என்பது Cyber Crime குழுக்களால் மேற்கொள்ளப்படும் செயலாம்.
புரியும்படி சொல்லனும்னா Thirst Traps தமது அழகுக்கான, உடலமைப்புக்கான அங்கீகாரத்தையும் பாராட்டுகளையும் தேடும் செயல் ஆகும். Honey Traps என்பது உங்களை தம் இஷ்டத்திற்கு ஆட்டி வைப்பதற்கான வலையை பின்னுவது ஆகும்.
உங்களுக்குத் தெரியுமா? Thirst Traps செய்யும் பிரபலமான Instagram Influencers, Social Media Stars களையும் எக்குத்தப்பா ஆசை காட்டி Gigolos களாக மாற்றி, ஆண் விபச்சாரத்தில் ஈடுபட சிலர் தூண்டுவது உண்டு.



















Comments
Post a Comment