ஒரு ஆணுக்கு அவனோட மூக்கு நீளமா எடுப்பா இருந்தால் அவனோட ஆண்குறியும் நீளமா எடுப்பா இருக்குமாம் என்று ஆண்களுக்கான சாமுத்ரீகா லட்சணம் கூறுவதாக ஒரு நம்பிக்கை சமூகவலைத்தளங்கள் வாயிலாக பதிவுகளாக பகிரப்படுவதை அதிகம் காணக்கூடியதாக உள்ளது. அதில் எந்தளவுக்கு உண்மை உள்ளது?
சாமுத்ரிகா லக்ஷணம் ஆண்களின் ஆண்குறி தொடர்பில் கூறியிருந்தாலும் அதில் ஆண்களின் மூக்கின் அளவுக்கும் அவர்களின் ஆண்குறியின் அளவுக்கும் இடையில் சம்பந்தமுள்ளதாக கூறவில்லை. இருப்பினும், ஆண்களின் மூக்கின் அளவுக்கும் அவர்களின் ஆண்குறியின் அளவுக்கு தொடர்பு உள்ளதாக ஒரு விஞ்ஞான ஆய்வு கண்டறிந்துள்ளது.
ஆமாங்க, இந்த ஆய்வு அறிக்கை மிக அண்மையில்(Journal Basic and Clinical Andrology - கார்த்திகை மாதம் 2025) வெளியாகிருந்தது. இந்த ஆய்வை ஜப்பானிய ஆய்வாளர்கள் மேற்கொண்டிருந்தனர். அது பற்று மேலும் தெரிய வருவதாவது,
Kyoto Prefectural University of Medicine யைச் சேர்ந்த ஆய்வாளர்கள் 124 ஆண்களின் பிணங்களின்(Dead Body) உடல்கூற்று ஆய்வறிக்கைகளில்(Post Mortem) இருந்து பெறப்பட்ட ஒவ்வொரு உடல் அங்கங்களின் அளவுகள் தொடர்பிலான Autopsy Data(தரவுகளை) ஆய்வு செய்துள்ளனர்.
அந்த ஆண்களின் உடலில் உள்ள ஒவ்வொரு அங்கங்களின் அளவுகளை, அவர்களின் நீட்டப்பட்ட ஆண்குறியின் அளவுடன்(புடைத்தெழாத நிலையில் நீட்டப்பட்ட ஆண்குறி/Stretched Penile Length - the Length of the Penis when gently pulled while flaccid) ஒப்பிட்டுப் பார்த்த போது தான், கால் பாதத்தின் அளவு, கை அளவை விட ஆண்களின் மூக்கின் அளவு, அவர்களின் ஆண்குறி அளவு தொடர்பில் ஊகங்களை மேற்கொள்ள மிகச்சிறந்த ஒரு வழிகாட்டி என்று கண்டறிந்துள்ளனர்.
பெரிய மூக்கைக் கொண்டிருந்த ஆண்களுக்கு அண்ணளவாக 5.3 inches (13.5 centimeters) அளவு ஆண்குறி இருந்துள்ளது. அதே போல சிறிய மூக்கைக் கொண்டிருந்த ஆண்களுக்கு 4.1 inches (10.4 centimeters) அளவு ஆண்குறி இருந்துள்ளது. இதில் அவர்களின் உடல் நிறை, உயரம், வயது போன்றன தாக்கம் செலுத்தியிருக்கவில்லை. அதன் காரணமாக இது ஆண்கள் கருவில் இருக்கும் போதே தீர்மானிக்கப்படும் ஒரு விடையமாக இருக்கக் கூடும் என்று கூறுகின்றனர்.
மூத்த ஆய்வாளர் Dr. Hiroshi Ikegaya இது தொடர்பில் கூறுகையில் ஆண்களின் மூக்கின் அளவுக்கும், ஆண்களின் ஆண்குறியின் அளவுக்கும் இடையிலான தொடர்பில் அவர்கள் கருவில் இருக்கும் போதே(Fetal Development) ஆண்களின் பாலியல் ஹோர்மோன்(Male Hormone) செல்வாக்குச் செலுத்தியுள்ளது. அதில் ஆண்களின் பூப்புக்கு முன்னரா வளர்ச்சியே அதிகம் தாக்கம் செலுத்தியுள்ளது என்றார்.
Dr. Rena Malik இது தொடர்பில் கூறும் போது, இந்த ஆய்வானது முன்னர் சமூகத்தில் நம்பிக்கையாக இருந்த ஆண்களின் பாதம், மற்றும் அவர்களின் கை அளவுக்கும் அவர்களின் ஆண்குறியின் அளவுக்கும் இடையிலான தொடர்பை பொய் என்ற நிரூபித்துள்ளது என்றார். அது மாத்திரமல்லாது ஆண்களின் ஆண்குறியின் அளவுக்கும் அவர்களின் மூக்கின் அளவுக்குமே நேரடியான தொடர்பு உள்ளதை எமது ஆய்வின் மூலம் கண்டறிய முடிந்துள்ளது என்றார்.
முன்னர் நடந்த இது போன்ற ஆய்வுகளின் படி, ஆண்களின் ஆள்காட்டி விரலுக்கும்(Index Finger) மோதிர விரலுக்கும்(Ring Finger) இடையிலான நீள வித்தியாசத்தை ஆண்குறி அளவுடன் தொடர்பு படுத்தி Asian Journal of Andrology இல் வெளியிட்டிருந்த Finger ratios and Genital development தொடர்பான ஆராய்ச்சியை Professor Kim Tae-beom(Gachon University) முன்னர் மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதில் யாருடைய மோதிர விரல், ஆள்காட்டி விரலை விட நீளமாக இருக்குதோ அவருக்கு அண்ணளவாக பெரிய ஆண்குறி இருக்கும் என்பதை கண்டறிந்தார். அவரும் இதற்கு கருப்பையில் கரு உண்டாகியிருக்கும் போது ஆண்களின் பாலியல் ஹோர்மோன்(Testosterone Exposure in the Womb) தாக்கம் செலுத்துவதையே காரணம் காட்டியிருந்தார்.























Comments
Post a Comment