நான்கு சுவற்றுக்குள், அதாவது மூடிய குளியலறையில் குளிக்கும் போது ஆண்கள் துண்டைக் கட்டிக் கொண்டு குளிக்கலாம். அது எந்த நிறத்தில் இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் பொது இடங்களில் ஆண்கள் குளிக்கும் போது ஜட்டி அணியாமல் வெள்ளை நிற லுங்கி, சாரம், கைலி, வேட்டி போன்ற ஆடைகளையோ, துண்டையோ அல்லது வெள்ளை நிற ஜட்டியையோ அணிந்து கொண்டு குளிப்பது உகந்ததல்ல.
அதற்குக் காரணம், ஆண்கள் வெள்ளை நிற ஆடைகள் ஈரமானதும் உடலுடன் ஒட்டி உங்கள் அந்தரங்கத்தை அப்பட்டமாக வெளித்தெரியச் செய்து விடும். அப்புறம் பொது இடங்களில் நிர்வாணமாக குளிப்பது போல ஒரே அசிங்கமா போயிடும்.
உங்களுக்கு வெள்ளை நிற ஆடைகள் அணிந்து தான் குளிக்க வேண்டும் என்றால் இடுப்புக்குக் கீழே அந்த ஆடைகளின் துணி அடுக்குகளை அதிகரித்து அதன் அடர்த்தியை அதிகரிக்கலாம்.
உதாரணமாக: வெள்ளை நிற வேட்டி, அல்லது லுங்கி கட்டிக் கொண்டு குளிக்கும் ஆண்கள் அதனை முழங்கால்களுக்கு மேலே மடித்துக் கட்டிக் கொண்டு குளிப்பதன் மூலம் இடுப்புக்குக் கீழே துணி அடுக்குகளைக் கூட்டி அப்பட்டமாக உங்கள் அந்தரங்கம் வெளித்தெரிவதை குறைக்கலாம்.
அந்த வகையில் பார்த்தால் ஆண்கள் கருமை நிற அல்லது கறுப்பு நிற ஆடைகளை தெரிவு செய்தால், அவர்களின் அந்தரங்கம் அப்பட்டமாக வெளித்தெரிவது மறைக்கப்படும்.
Keywords: வெள்ளை வேட்டி மற்றும் லுங்கி கட்டிக் கொண்டு ஆண்கள் ஏன் பொது இடங்களில் குளிக்கக் கூடாது?





















Comments
Post a Comment