வயதுக்கு வந்த ஆண்கள் உள்ளாடை அணிவது அவசியம் ஆகும். ஜட்டி, பனியன், காலுறைகள் போன்றவற்றை ஆண்களுக்கான பிரதானமான உள்ளாடைகளாக கருதலாம்.
ஆண்கள் தமது உள்ளாடைகளுக்கு பிறந்த நாள் கொண்டாடக் கூடாது: ஆண்கள் தமது ஜட்டியை அடிக்கடி மாற்ற வேண்டும். ஒரு உள்ளாடையை வருஷக்கணக்கில் அணியக் கூடாது. ஜட்டி, பனியன் போன்றவை முழுமையாக பழுதடையும் வரை அவற்றை அணியக் கூடாது. குறைந்தது 3 - 6 மாதங்களுக்கு ஒரு முறையாவது பழைய ஜட்டியை எறிந்து விட்டு, புதிய ஜட்டியை அணிய வேண்டும்.
விலையுயர்ந்த ஜட்டி, பனியன்களை நீண்ட காலத்திற்கு பயன்படுத்த முடியும் என்பதற்காக அவற்றை வருடக் கணக்கில் அணியக் கூடாது.
விலை குறைந்த, தரம் குறைந்த ஜட்டி, பனியன்களை அணியும் ஆண்கள் குறைந்தது 3 மாதத்திற்கு ஒரு முறையாவது அவற்றை மாற்ற வேண்டும்.
அதிகம் இறுக்கமான ஜட்டி அணிந்து ஆண்கள் தூங்கக் கூடாது. அது உங்களுக்கு செளகரியமாக(Comfort) இருந்தாலும் கூட அது கொடுக்கும் செளகரியத்தை விட அதிகளவான வியர்வையை அந்தரங்கப் பகுதிகளில் சிறைபிடித்து வைத்திருக்கும். அதன் காரணமாக சருமப் பிரச்சனை, அரிப்பு போன்றவை அந்தரங்கப் பகுதிகளில் ஏற்படலாம்.
அதிகம் இறுக்கமான Tight Underwear உங்களை வெறுமனே சிக்கினு, கவர்ச்சியாக மாத்திரம் காட்டாது. அது உங்கள் பாலுறுப்புகளுக்கு மூச்சு விட முடியாத வகையில் அழுத்தத்தைக் கொடுக்கும்.
பல மணி நேரம் அணிந்திருந்த பின்னரும் உங்கள் ஜட்டிகளில் துர்வாடை வீசவில்லையா? அப்பவும் Fresh ஆக இருப்பதாக உணர்கிறீர்களா? அது கூட Bacteria களின் மோசடி வேலையாக இருக்கலாம். ஆண்கள் தொடர்ந்து பல மணி நேரம் ஒரே ஜட்டியை அணிந்திருக்கக் கூடாது.
நேற்று போட்ட ஜட்டியை இன்று திரும்ப துவைக்காமல் அணியலாமா? நிச்சயமாக இல்லை. ஆனால் நம்மில் பலர் வேறு வழி இல்லாமல் அணிந்திருப்போம். ஏற்கனவே பயன்படுத்திய ஜட்டியை துவைக்காமல் மீண்டு பயன்படுத்துவது குளித்து சுத்தமாக இருக்கும் உங்கள் உடலில் மீண்டும் அழுக்கை பூசிக் கொள்வதற்கும் சமம்.
ஜிம்மிற்கு(Gym) செல்லும் போது அல்லது ஜிம்மில் வைத்து அணிந்த ஜட்டியை(Jockstrap), ஜிம்மை விட்டு வெளியேறும் முன்னர் அல்லது அடுத்த வேலையை பார்க்கச் செல்லும் முன்னர் மாற்ற வேண்டும்.
ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது, அல்லது விளையாடும் போது வியர்வையில் நனைந்து, ஊறிய ஜட்டியையும் பனியனையும் நாள் முழுவதும் அணிந்திருக்கக் கூடாது.
உள்ளாடைகளை மாற்றுவது உங்கள் சுய கெளரவத்தையும், மரியாதையையும் காப்பாற்றுவது போன்றதாகும். நீங்கள் அணியும் முன்னர் உங்கள் ஜட்டியையும், பனியனையும் மணந்து/முகர்ந்து பார்க்கும் போது லேசாகக் கூட துர்வாடை வீசினால் அதனை அணியாமல் அலசிக் காயப் போடவும்.
அந்தரங்கப் பகுதிகளில் சரும பிரச்சனைகள், அரிப்பு போன்றவற்றை அவதிப்படும் ஆண்கள் வெந்நீரில் தமது உள்ளாடைகளை அலசுவது உகந்தது.
உங்கள் தேவைக்கு ஏற்ப ஜட்டிகள் உருவாக்கப்படும் துணையை தெரிவு செய்யவும். அன்றாடம் அணியும் ஜட்டி, பனியன்கள் பருத்தி துணியில்(100% Cotton) செய்யப்பட்டிருப்பது உகந்தது. விளையாட்டு, உடற்பயிற்சி போன்ற விசேட தேவைகளுக்கு செயற்கை நார்களால்(Synthetic Fibers:Spandex, Nylon, etc) செய்யப்பட்ட, அல்லது கலப்பு துணிகளில்(Cotton Blend) செய்யப்பட்ட உள்ளாடைகளை தெரிவு செய்து அணியலாம்.
எப்போதும் காய்ந்த சுத்தமான உள்ளாடைகளை அணியவும்.











Comments
Post a Comment