கலப்பு திருமணம் செய்தால், வேறு சாதியினரை சேர்ந்தவர்களை, வேறு மதத்தினரை சேர்ந்தவர்களை, வேறு இனத்தவரை சேர்ந்தவர்களை திருமணம் செய்தால் அவர்களுக்கு குழந்தை பிறப்பதில் பிரச்சனை ஏற்படுமா? அப்படியே குழந்தை பிறந்தாலும் அந்த குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் மலட்டுத்தன்மை ஏற்படும் சாத்தியம் அதிகமாக இருக்குமா?
நிச்சயமாக இல்லை. இவை ஜாதி மாறி திருமணம் செய்வதை தடுக்கும் வகையில் பரப்பப்படும் வதந்திகளாகும். ஒரு ஆணோ அல்லது பெண்ணோ வேறு சாதியைச் சேர்ந்தவரை, அல்லது வேறு மதத்தை சேர்ந்தவரை, அல்லது வேறு இனத்தை சேர்ந்தவரை திருமணம் செய்தால் அவர்களுக்கு சொந்த சாதியில், சொந்த மதத்தில், சொந்த இனத்தில் திருமணம் செய்து உடலுறவு கொண்டால் உருவாகும் குழந்தைகளை விட மிகவும் ஆரோக்கியமான குழந்தைகள் கிடைக்கும்.
ஒரே குடும்பத்தினருக்குள் திருமணம் செய்வதால் அதாவது இரத்த உறவுகளுக்கு இடையே திருமணம் செய்தால், பெற்றோரிடமிருந்து அல்லது அவர்களின் முன்னோர்களிடம் இருந்து கடத்தப்படும் மறைந்திருக்கும்(recessive) மரபணு நோய்கள் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளிடம் வெளிப்படும் அபாயம் அதிகரிக்கிறது. இதனால் தாலசீமியா, சிக்கிள் செல் அனீமியா, குருட்டுத்தன்மை, செவித்திறன் குறைபாடு, இதய நோய்கள், மூளை வளர்ச்சி குறைபாடு போன்ற பல பரம்பரை நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. இது மரபணுக்களின் பன்முகத்தன்மையை குறைத்து, நோய்களுக்கான பாதிப்பை இரட்டிப்பாக்குகிறது.
கலப்பு திருமணங்களின் மூலம் எதிர்கால சந்ததியினருக்கு மலட்டுத்தன்மை ஏப்போது ஏற்படும்? ஒரு சாதியைச் சேர்ந்த ஆணோ அல்லது பெண்ணோ, மனிதர் அல்லாத வேறு ஒரு உயிரினத்தை திருமணம் செய்தாலோ அல்லது அந்த உயிரினத்துடன் உடலுறவு கொண்டாலோ தான் குழந்தையின்மை பிரச்சனை ஏற்படும். வருடத்தின் 365 நாட்களும் உடலுறவு கொண்டாலும் அவர்களுக்கு இடையில் குழந்தை உருவாகும் பொறிமுறை நடைபெறாது.
மனிதனின் விந்து விலங்குகளுடன் சேராது. விலங்குகளின் கருமுட்டை மனிதனின் விந்துடன் சேராது. விலங்குகளின் விந்து மனிதர்களின் கருமுட்டையுடன் சேராது.
உயிரிகளுக்கிடையான இனக்கலப்பிற்கு உதாரணமாக குதிரை, கழுதை, சிங்கம், புலி போன்றவற்றின் இனக்கலப்பை கூறலாம்.
ஆண் குதிரையை பெண்கழுதையுடன் இனக்கலப்பில் ஈடுபடுத்தும் போது மலட்டுத்தன்மையுடைய ஹின்னி (Sterile Hinny) உருவாகிறது.
ஆண் கழுதையை பெண்குதிரையுடன் இனக்கலப்பில் ஈடுபடுத்தும் போது கோவேறுக் மலட்டுத்தன்மையுடைய கழுதை (Mule) உருவாகிறது.
ஆண் சிங்கத்தை பெண் புலியுடன் இனக்கலப்பில் ஈடுபடுத்தும் போது மலட்டுத்தன்மையுடைய லைகர் (Liger) உருவாகிறது.
ஆண் புலியை பெண் சிங்கத்துடன் இனக்கலப்பில் ஈடுபடுத்தும் போது மலட்டுத்தன்மையுடைய டைகான் (Tigon) உருவாகிறது.
Keywords: சாதி ஒழிப்புத் திருமணம் (Caste Annihilation Marriage), சாதி கலப்புத் திருமணம், சீர்திருத்தத் திருமணம், கலப்பு திருமணம், சுயமரியாதை திருமணம், செய்து கொண்டால் குழந்தை பிறக்காதா? இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர், இஸ்லாமிய, பெளத்த, வேற்று இன ஆண், வேற்று இன பெண், வெளி நாட்டு ஆண், வெளி நாட்டு பெண், வெளி நாட்டு மாப்பிள்ளை, வெளியூர், நம்மூர், உள்ளூர், சம்பந்தம், ஆண்ட சாதி, அடிமை சாதி, மேல் ஜாதி, கீழ் ஜாதி









Comments
Post a Comment