Skip to main content

Posts

Showing posts from September, 2025

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


பசங்க வயசுக்கு வந்ததை எப்படி தெரிந்து கொள்ளலாம்?

ஆண் பிள்ளைகள் வயதுக்கு வருதல் தொடர்பான ஒரு ஆழமான புரிதல் நமது சமூகத்தில் இல்லை. அதற்கு மிக முக்கிய காரணம் பாலியல் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்காமையே ஆகும். அந்த வகையில் இந்தப் பதிவின் மூலம் ஆண்கள் பூப்படையும் போது அவர்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள், அவர்களின் உளத்தில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பில் அறிந்து கொள்வோம். ஆண் வயதுக்கு வரும் பருவத்தை கடந்து செல்வது இந்தக் காலத்தைப் பொறுத்தவரையில் மிகவும் கடினமாகும். பள்ளி பாட புத்தகங்களில் ஓரளவிற்கு தெரிந்து கொள்கிறார்கள். இருந்தாலும் பாலியல் கல்வி குறித்த சரியான விழிப்புணர்வு இல்லை. நண்பர்கள் வழியாக மற்றும் அவன் படித்து, தேடி, சமூகத்தில் இருந்து பார்த்தும், தானாகவே ஆண்கள் பூப்படைதல் பற்றிய அறிவைத் தேடிக் கற்கிறான். ஆபாச(Porn) இணையத்தளங்கள் அவனின் தேடலை, எல்லை கடக்கச் செய்கின்றது.  எல்லா ஆண்களுக்கும் பூப்படைதல் பூ போன்ற வழிப் பாதையில்(Smooth Process) நடைபெறாது. உங்களுக்குத் தெரியுமா? சில ஆண்கள் புகைப்பிடிப்பதையும், மது அருந்துவதையும் ஆண்களின் அடையாளமாக கருதுகின்றனர். அது வயது வந்த ஆண்களுக்கான இயல்பான நடத்தையாகவும் பார்க்கின்றனர். அது ...

இருண்ட வாழ்வில் உடலுறவு மூலம் ஒளியேற்றலாமா?

ஒரு ஆண் அவனது மனைவியுடன் முதலிரவு கொண்டாடிய பின்னர், திருப்தியடைந்து நன்றாக அசந்து நிர்வாணக் கோலத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவனுக்கு ஒரு கனவு தோன்றியது.  அந்த கனவில், கடவுள் அவனை ஒரு ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்று, அங்கே அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் எரிந்து கொண்டிருந்த பல கோடிக்கணக்கான சுட்டி விளக்குகளைக் காண்பித்து இது தான் இந்த உலக வாழ்க்கை. ஒவ்வொரு விளக்கும் ஒவ்வொரு உயிர். இந்த சுட்டி விளக்குகள் எரியும் வரை தான் இந்த உலக வாழ்வை நீங்கள் வாழ்வீர்கள் என்கிறார்.  அப்போது இதில் எது என் விளக்கு என கடவுளிடம் அவன் கேட்க, கடவுள் இரு விளக்குகளைக் காண்பித்து இது உன்னுடையது, அது உன் மனைவியினுடையது என்றார். தன்னுடைய விளக்கை பார்த்தவன் அதிர்ச்சியடைந்தான். அதில் சிறிதளவு எண்ணெய் தான் இருந்தது. ஆனால் அவனது மனைவியின் விளக்கி அதிக எண்ணெய் இருந்தது. தான் சாகப் போகிறேன், தன் மனைவி விதவையாகப் போகிறாள், எங்களுக்கு இப்போது தானே கல்யாணம் நடந்தது என்று உணர்ந்து, பயந்து உடனே தனது மனைவியின் விளக்கில் இருந்து எண்ணெய்யை கை விரல்களால் தடவி அள்ளி தனது விளக்கில் ஊற்றினான். அப்போது அவன் எதிர்பார்க்...