மணமகன் மணமேடைக்கு மேலாடை அணிந்து வருவது அவசியம் அல்ல. சில சாதிய பழக்கங்கள், குடும்ப வழக்கம் போன்றவை காரணமாக மாப்பிள்ளை மண மேடையில், சட்டை அணிந்திருப்பது விருப்பத்திற்குரிய ஒன்றாக உள்ளது. ஆனால் சட்டை அணியாவிட்டாலும் மாப்பிள்ளை தலைப்பாகை அணிந்திருப்பார். அது ஒரு வகையில் மேலாடை போன்று கருதப்படும்.
தமிழ்த் திருமணத்தில், "உருமால் கட்டு சீர்" என்பது பாரம்பரிய பரிசுகளின் தொகுப்பைக் குறிக்கிறது. குறிப்பாக, இது மணப்பெண்ணின் குடும்பத்தினர் மணமகனின் குடும்பத்தினருக்கு வழங்கும் பரிசுப் பொருட்களைக் குறிக்கிறது.
சுண்ணாம்பு, மஞ்சள் கலந்த பிசைந்து சாதத்தை ஐந்து உருண்டைகளாக்கி நாவிதர்(முடி திருத்துபவர்/அந்த கால வைத்தியர்) வைத்திருப்பார். 
உங்களுக்குத் தெரியுமா? நாவிதர் என்பர் தற்காலத்தில் முடி திருத்துபவராக பார்க்கப்பட்டாலும், அந்தக் காலத்தில் வீடுகளுக்கு வந்து முஸ்லிம் சிறுவர்களுக்கு சுன்னத் செய்பவரும் நாவிதர் தான்.
இதை சீர்ப்பெண் வாங்கி முக்காலியில் அமர்ந்திருக்கும் மாப்பிள்ளையின் தலை, இரு தோள்கள், இரு பாதங்கள், ஆகிய ஐந்த இடங்களில் வைத்து "நிறைநாழி" (ஒரு நெல் நிரப்பப்பட்ட அளவுகோலாகும்) சுற்றி பின் அந்த உருண்டைகளை எடுத்த எறிவார்கள்.  இது திருஷ்டி கழிப்பதாகும்.  பிறகு அண்ணிமார்கள் கேலியுடன் மஞ்சள், பருப்பு, ரசத்தண்ணீர் என நீர் வார்க்க, தப்பித்து பின் நல்ல நீரிலே குளித்து முடித்து, புத்தாடை உடுத்தி வருவார் புதுமாப்பிள்ளை. 
அவருக்கு தாய்மாமன் மெட்டி அணிவித்து, உருமால்கட்டி(தலைப்பாகை), விபூதி, சந்தனம், குங்குமம் வைத்து வாழ்த்துவார்கள்.  பிறகு மாமன் வீட்டு விருந்துண்டு விரதத்தை முடிப்பார். இந்த ஆண்மகன் குடும்பத்தை முழுவதும் நிர்வகிக்கும் தகுதி பெற்றுவிட்டார் என்று அறிவிப்பதே இந்த உருமால் கட்டு சீர்.  மணமகளுக்கும் இவ்வாறே திருஷ்டி கழித்து, பின் குளித்து, புதுச்சேலை கட்டி நிற்கும் அவளின் முன்னே, முக்காலியில் தாய்மாமன் அமர்ந்து அவளுக்கு மெட்டி அணிவித்து வாழ்த்துவார்கள். பிறகு இவளும் தன் தாய்மாமன் வீட்டு விருந்துண்டு விரதத்தை முடிப்பாள்.
"மொதல்ல மாப்பிள்ளைக்கி உருமாலைகட்ற சீருங்க. இந்த சீரு தாய் மாமன் தான் செய்யோணுமுங்க. பழைய காலத்துல மாப்பிள்ள பையனை மாமன் அவங்க வீட்டுக்கே கூட்டிட்டுப்போயித்தான் இந்த சீரைச்செய்வாங்க. இப்பெல்லாம் கல்யாண ஊட்டுலயே இந்தச்சீரை செஞ்சுடறாங்க.
மாப்பிள்ளப் பையனைக் குளிப்பாட்டி புதுத் துணி குடுத்து, கட்டிக்கச்சொல்லி, ஊட்டுக்குள்ள ஆஜாரத்துல ஒரு சேரைப்போட்டு பையனை உக்கார வைப்பாங்க. 
மாப்பிள்ளைக்கும் தாய் மாமனுக்கு இடையில் நண்பர்கள் போன்ற நெருக்கமான உறவு இருந்தால் ஜட்டி, பனியன் போன்ற உள்ளாடைகளும் உருமாலை சீரில் சேரும்.
நல்ல பெரியதுண்டு உருமாலை கட்றதுக்குன்னு வாங்கியிருப்பாங்க. அந்ததுண்டுல ஒரு மூலைல ஒரு ரூபாய் காசை முடிஞ்சு விடுவாங்க. மாமன்காரன் அதை எடுத்து பையன் தலைல உருமாலை(முண்டாசு) கட்டி உடுவாருங்க. அந்த உருமாலைல ஒரு மொழம் மல்லிகைப்பூவ சொருகி உடுவாங்க. அப்பறம் நெத்திக்கு திண்ணூறு பூசி(திருநீறு), சந்தணப்பொட்டு வச்சு, செகப்பு பொட்டும் வைப்பாங்க. அப்பறம் மாப்பிள்ளைப்பையன் மாமன் கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கீப்பானுங்க. 
அப்பமாமன்மாரன் அவஞ்சக்திக்கு தகுந்தா மாதிரி பணமோ இல்லேன்னா ஏதாச்சும் மோதிரமோ, சங்கிலியோ போடுவாருங்க. அப்பறம் ஏதாச்சும் கோயில் பக்கத்துல இருந்தா அங்கே போயி சாமி கும்பிட்டுட்டு வருவாங்க. 
இல்லைன்னாஊட்டுல இருக்கற சாமிய கும்பிட்டுக்குவாங்க. இல்லைன்னா, ஒருத்தரு பையன் உக்காந்திருக்கற சேருக்கு முன்னாலயே, ஒரு புள்ளாரைப்(பிள்ளையார்) புடிச்சு வச்சு அங்கயே சாமி கும்பிட்டுக்குவாங்க. இதுதாங்க உருமாலைக்கட்டு சீருங்க.
அப்பறம் கூப்பிட்டு இருக்கற ஒரைம்பரக்காரங்க எல்லாரும் உக்காந்து விருந்து சாப்புட்டுட்டு பையனைக் கூப்பிட்டுட்டுப்போய் அவன் ஊட்டுல உட்டுட்டு வருவாங்க." - அனுபவப் பதிவு.
உங்களுக்குத் தெரியுமா? பிரம்மச்சரியம் கழித்தல் என்று ஒரு சடங்கு 60-70 ஆண்டுகளுக்கு முன் கொங்கு திருமணங்களில் நடைமுறையில் இருந்தது. இப்போது இல்லை. உருமால்கட்டு சீருக்கு முன், நாவிதர் (அந்த கால வைத்தியர்) மணமகனின் அந்தரங்க முடிகளை மழிக்கும் ஒரு நடைமுறை (தனி அறையில் தான்). மணமகனின் ஆண்மை தாம்பத்திய வாழ்க்கைக்கு தகுதி படைத்தவனா என்று கண்டறியும் ஒரு சடங்காக சொல்லப்படுகிறது!!!
மெட்டி அணியும் ஆண்கள்
சடங்குகளின் போது மாப்பிள்ளைக்கு மச்சான் ஜட்டி முதற்கொண்டு அணிந்து விட உதவுவது இதற்குத்தான்
மணமகளின் சகோதரர்களே (மச்சான்கள்) மாப்பிள்ளைக்கு ஆடை அணிகலன் அணிய உதவி செய்வர். உள்ளாடை முதற்கொண்டு. மறைமுகமாக மணமகனின் உடல்/ஆண்மை ஆரோக்கியத்தை கண்டு கொள்ளும் ஒரு முயற்சி ஆகும்!
திருமணத்தில் தாலி கட்டும் முன்பு  சட்டைக்குப் பதிலாக மாப்பிள்ளைக்கு போடப்படும் ஒரு மேலாடை உருமால்(Urumaal) ஆகும்.
In Tamil weddings, “Urumala Kattu Seer” refers to the traditional presentation of gifts from the bride’s family to the groom’s family. This custom is an essential part of the wedding rituals and is rich in cultural significance 
Components of Urumala Kattu Seer:
1. Clothes for the groom and bride. A set of traditional attire, such as a silk dhoti and shirt, sarees, blouses, and other clothing items. Also, New clothes for close family members on both sides.
2. Gold, silver, and other ornaments of jewellery. 
3. A variety of fresh fruits and traditional sweets arranged beautifully.
4. Coconut and Betel Leaves are considered auspicious and are a must-have in the seer.
5. Kitchen utensils, decorative items, and sometimes even larger items like furniture.
Presentation: The items are carefully arranged in decorative trays and baskets. Everything is meticulously wrapped and sometimes covered with colored cloths and embellishments.




























பிரம்மச்சரியம் கழித்தல் என்று ஒரு சடங்கு 60-70 ஆண்டுகளுக்கு முன் கொங்கு திருமணங்களில் நடைமுறையில் இருந்தது. இப்போது இல்லை. உருமால்கட்டு சீருக்கு முன், நாவிதர் (அந்த கால வைத்தியர்) மணமகனின் அந்தரங்க முடிகளை மழிக்கும் ஒரு நடைமுறை (தனி அறையில் தான்). மணமகனின் ஆண்மை தாம்பத்திய வாழ்க்கைக்கு தகுதி படைத்தவனா என்று கண்டறியும் ஒரு சடங்காக சொல்லப்படுகிறது!!!
ReplyDeleteமிக்க நன்றி நண்பா. இது போல் மேலும் பல விடயங்களை எமக்கு அறியத் தரவும்.
Deleteமணமகளின் சகோதரர்களே (மச்சான்கள்) மாப்பிள்ளைக்கு ஆடை அணிகலன் அணிய உதவி செய்வர். உள்ளாடை முதற்கொண்டு. மறைமுகமாக மணமகனின் உடல் / ஆண்மை ஆரோக்கியத்தை கண்டு கொள்ளும் ஒரு முயற்சி ஆகும்!!!
ReplyDeleteமிக்க நன்றி நண்பா. இது போல் மேலும் பல விடயங்களை எமக்கு அறியத் தரவும்.
Delete